Shabeer And Mirnaa Starring Birthmark Movie Review In Tamil | பர்த் மார்க் படம் எப்படி உள்ளது திரைவிமர்சனம்

Estimated read time 1 min read

Birthmark Movie Review: சார்பட்டா படத்தின் மூலம் அனைவரது மத்தியிலும் பிரபலமானவர் நடிகர் ஷபீர் கல்லாரக்கல். ஜெய்லர் படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்தவர் நடிகை மிர்னா . இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் தான் பர்த் மார்க் (Birthmark).  ஸ்ரீராம் சிவராமன் மற்றும் விக்ரம் ஸ்ரீதரன் எழுதியுள்ள இந்த படத்தை விக்ரம் ஸ்ரீதரன் இயக்கியுள்ளார். ஸ்ரீராம் சிவராமன், விக்ரமன் ஸ்ரீதரன் இணைத் தயாரிப்பில் இந்த படம் உருவாகி உள்ளது. சார்பட்டா படத்திற்குப் பிறகு நடிகர் சபீர் ஒப்பந்தமான முதல் படம் தான் இந்த பர்த் மார்க்.  இந்த படத்தில் ஷபீர், மிர்னா தவிர பொற்கொடி செந்தில், தீப்தி ஓரியண்டேலு, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | Rakul Preet Singh: காதலரை கரம் பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்! மாப்பிள்ளை யார் தெரியுமா?

ஷபீர் கல்லாரக்கல் டேனியல் என்ற ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் இருந்து வீடு திரும்புகிறார். அப்போது டேனியல் மனைவி மிர்னா கர்ப்பமாக உள்ளார். அவருக்கு இது நம் குழந்தை தானா என்ற சந்தேகம் எழுகிறது. பின்பு தனது மனைவியை இயற்கையான முறையில் பிரசவம் பார்ப்பதற்காக ஒரு மலைக்கு கூட்டி செல்கிறார், அங்கு எந்தவித அறுவை சிகிச்சையும், மாத்திரைகளும் இல்லாமல் இயற்கை சார்ந்த முறையில் பிரசவம் பார்க்கின்றனர். இறுதியில் மிர்னாவிற்கு குழந்தை பிறந்ததா? அது யாருடைய குழந்தை என்பதே பர்த் மார்க் படத்தின் கதை.

birthmark

படத்தில் மொத்தமே ஐந்து முதல் ஆறு கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளனர்.  ஒரு ராணுவ அதிகாரி என்று சொன்னவுடன் நம்பும் அளவிற்கு உடல் கட்டுடன் ஷபீர் திரையில் நன்றாக தெரிகிறார். ஒரு போருக்கு சென்று திரும்பியவரின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தனது நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.  ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிர்னா படம் முழுக்க 9 மாத கர்ப்பிணியாக நடித்துள்ளார். ஒரு நிஜமான கர்ப்பிணி பெண் நடப்பதற்கும், உட்காருவதற்கும் எவ்வளவு சிரமப்படுகிறாரோ அதே சிரமத்தை தனது நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்.  அமுலு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீப்தி, ஆஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள போர் கொடி மற்றும் செபஸ்டின் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்திரஜித் ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

படம் முழுக்க ஒரு த்ரில்லர் ஜானரில் நகர்கிறது, அடுத்து என்ன நடக்கப் போகும் என்ற பரபரப்பை நமக்குள் ஏற்படுகிறது.  இந்த படத்தின் எழுத்தாளர் ஸ்ரீராம் சிவராமன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.  தனது மனைவியின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை தன்னுடையது தானா என்ற சந்தேகத்திலும் அதே சமயத்தில் தனது மனைவி மீது உள்ள அதிக பாசத்தையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் ஷபீர். டெக்னிக்கலாகவும் படம் சிறப்பாக உள்ளது. உதய் தங்கவேலுவின் ஒளிப்பதிவில் அந்த மலை கிராமத்தை நன்றாகவே காட்டியுள்ளனர். விஷால் சந்திரசேகரன் இசை மற்றும் இனியவன் பாண்டியனின் படத்தொகுப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது.  

படத்தில் உள்ள பெரிய பிரச்சனை அது சொல்ல வரும் கருத்தை ஆழமாக சொல்லாமல் போனதுதான், நிறைய பேருக்கு இந்த படம் புரியாமலும் போக வாய்ப்புள்ளது. நிறைய விஷயங்களை மேலோட்டமாகவும், மெட்டபர் வழியிலும் சொல்லி உள்ளனர். அதேபோல சில இடங்களில் படம் நிஜ உலகில் இருந்து சற்று விலகியும் உள்ளது. இதுவும் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்த தவறுகிறது.  ஒரு வித்தியாசமான படத்தை கொடுக்கும் முயற்சியில் இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் பாதி கடலை மட்டுமே தாண்டி உள்ளார்.

மேலும் படிக்க | Trisha: ‘அருவருப்பா இருக்கு..’ கூவத்தூர் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த த்ரிஷா! ட்வீட் இதோ.. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours