சமீபத்தில் அமித் ஜோஷி, ஆராதனா ஷா இயக்கத்தில் வெளியான “Teri Baaton Mein Aisa Uljha Jiya’ படத்தில் ஷாகித் கபூர் நடித்திருந்தார். காமெடி, ரொமான்ஸ் கலந்த அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தியது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், “ நான் புகைபிடிக்கும்போது எப்போதும் என் மகளுக்குத் தெரியாமல் மறைந்திருந்தே புகைபிடிப்பேன்.
இதுவே நான் புகைப்பழக்கத்தை கைவிட காரணமாக இருந்தது. ஒருமுறை அவளுக்குத் தெரியாமல் புகைபிடிக்கும்போது எவ்வளவு நாட்கள் இப்படியே இருப்போம். இனி புகைபிடிக்க கூடாது என்று முடிவு செய்து புகைபிடிப்பதை நிறுத்திவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.
ஷாஹித் கபூர் 2015-ல் மீரா ராஜ்புத்தை என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மிஷா, ஜைன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours