Samantha: “நாக சைதன்யாவை பிரிந்த அந்த ஆண்டு மிகவும் கடினமாக இருந்தது!” – மனம் திறந்த சமந்தா | Samantha Ruth Prabhu talks about her divorce and health issues

Estimated read time 1 min read

இந்நிலையில் கடந்த வாரம் ஓய்விலிருந்து பணிக்குத் திரும்பியுள்ளதாகத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “ஓய்விலிருந்து மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டேன். இந்த கொஞ்ச நாள்களில் எந்த வேலையும் இல்லை எனக்கு. அதனால் என் நண்பர்களுடன் சேர்ந்து “ஹெல்த் பாட்கேஸ்ட்’ ஒன்றைச் செய்துள்ளேன். இது நானே எதிர்பார்க்காத ஒன்றுதான். அதை மிகுந்த விருப்பத்துடன் நேசித்துச் செய்திருக்கிறேன். இது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.

Samantha | சமந்தா

Samantha | சமந்தா

அந்த வகையில் அவரது யூடியூப் சேனலில் வெளியான ‘ஹெல்த் பாட்கேஸ்ட்’ எபிசோடு ஒன்றில் மயோசிடிஸ் நோய் கண்டறிவதற்கு முந்தைய ஆண்டு எவ்வளவு கடினமாக இருந்தது என்பது குறித்துப் பேசியிருக்கிறார். அதாவது மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்படுவதற்கு ஒரு வருடம் முன்புதான் சமந்தா தனது கணவரும், நடிகருமான நாக சைதன்யாவைப் பிரிந்தார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours