Rakul Preet Singh: நட்சத்திரங்கள் வாழ்த்து; காதலனைக் கரம் பிடித்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

Estimated read time 1 min read

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தன் காதலரான நடிகர் ஜாக்கி பக்னானியை கரம் பிடித்தார்.

இவர்களது திருமணம் நேற்று (பிப்ரவரி 21ம் தேதி) தெற்கு கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ரிசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அவர்களது குடும்ப பாரம்பரிய முறைப்படி காலையில் ஆனந்த் கராஜ் விழாவையும், சூரிய அஸ்தமனத்தில் சிந்தி விழாவையும் நடத்தி கோவா கடற்கரையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பிங்க் நிற ரோஜாக்களால் நிறைந்த கிராண்டான தருண் தஹிலியானி வகை லெஹங்காவில் ரகுல் ப்ரீத் சிங் ஜொலிக்க, இவர்களது திருமணப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பிரபல நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் எனப் பலரும் திருமண ஜோடிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இவர்களது திருமணக் கொண்டாட்டம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி இரவிலிருந்து ஆரம்பித்துக் கடந்த மூன்று நாள்களாக ஆடல், பாடல் எனப் பல கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று முடிந்திருக்கின்றன. இத்திருமண விழாவில் இருவீட்டாரது நெருங்கிய குடும்ப உறவினர்கள், நண்பர்களுடன் ஷாகித் கபூர், அர்ஜுன் கபூர், அனன்யா பாண்டே, வருண் தவான், சாரா அலிகான், ஷில்பா ஷெட்டி, ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அதேசமயம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் திருமணப் பத்திரிகைகளை டிஜிட்டலில் மட்டும் அனுப்புவது, பட்டாசுகளைத் தவிர்ப்பது, பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பது எனச் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி திருமணவிழாவைச் சிறப்பாக நடத்தியுள்ளனர்.

வாழ்த்துகள் ரகுல் – ஜாக்கி!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours