Zee Tamil Anna Serial Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகத்தை சூடாமணி என் முகத்திலேயே முழிக்காத என்று திட்டி அனுப்பிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதிகம் விரும்பி பார்க்கப்படும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் அண்ணா சீரியலில், நேற்றைய எபிசோடில் ஷண்முகம் குடி போதையில் ரோட்டில் விழுந்து கிடக்க இதை பார்த்து இசக்கி பதறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
ஷண்முகம் தன்னை பிடிக்க வருபவர்களை அடிக்கிறான். அதைப் பார்த்த இசக்கி யாராவது கையை பிடிங்க வீட்டில் விட்டுடலாம் என்று உதவிக்கு கூப்பிட்டாலும் யாரும் வரத் தயாராக இல்லை. இந்த நிலையில் இசக்கியை பின்தொடர்ந்து வந்த முத்துப்பாண்டி, வாடி வீட்டுக்கு போகலாம் என்று இசக்கியை கூப்பிட்டாலும், இசக்கி அவனுடன் போக மறுக்கிறாள்.
இதனால் முத்துப்பாண்டி பக்கத்தில் இருக்கும் கல்லை தூக்கிக் கொண்ட முத்துப்பாண்டி, சண்முகத்தின் நெஞ்சில் கால் வைத்துக் கொண்டு மிரட்டுகிறான். வரலைனா உன் அண்ணன் மேல் கல்லைப் போட்டு கொன்னுடுவேன் என்று மிரட்டியதும், இசக்கி பயந்து முத்துபாண்டியுடன் சென்று விடுகிறாள்.
மேலும் படிக்க | சீதாவை சிக்க வைக்க நான்ஸி போடும் திட்டம்! சீதா ராமன் சீரியல் அப்டேட்!
வீட்டிற்கு வந்த இசக்கி, ஷண்முகம் குடித்து விழுந்து கிடக்கும் விஷயத்தை சொல்கிறாள். இதைக்கேட்ட பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள்.
இனிமே உன் அண்ணன் வீட்டிற்கு போற வேலையெல்லாம் வச்சிக்க கூடாது என்று முத்துப்பாண்டி மிரட்டுகிறான். ஏன் போகக் கூடாது என்று பாக்கியம், இசக்கிக்கு சப்போர்ட்டாக பேசுகிறாள். மறுபக்கம் பரணி, ரத்னா, வீரா ஆகியோர் சண்முகத்தை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு, தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி அவனை இயல்பாக்க முயற்சிக்கின்றனர்.
இங்கே பாக்கியம் பேசியதை கேட்டு பாண்டியம்மா இசக்கியை அடிக்க வர, பாக்கியம் கையை பிடித்து அவ என் மருமகள், அவளுக்கு துணையா நான் இருக்கேன், அவ மேல கையை வைக்கிற உரிமை உங்களுக்கு இல்ல என்று பதிலடி கொடுத்துவிட்டு கூட்டி செல்கிறாள்.
மேலும் படிக்க | நினைத்தேன் வந்தாய்: தப்பித்த சுடர்… டார்ச்சர் செய்து தவிக்க விடும் குழந்தைகள்!
அதனை தொடர்ந்து வைகுண்டமும் ஷண்முகமும் இதுவரைக்கும் குடிக்காத ஷண்முகம் இப்படி குடிச்சிட்டு வந்து மானத்தை வாங்கிட்டானே என்று வருத்தப்படுகின்றனர்.
உடனே பரணி நேத்து நைட்டே அவன் இசக்கி இசக்கினு புலம்பிட்டு இருந்தான், நான் தான் ஊசி போட்டு தூங்க வைத்தேன், இன்னைக்கும் அதே மனநிலையோட இருந்திருப்பான். சரக்கு கிடைக்கவே குடிச்சிருக்கான் என்று சொல்லி ஷண்முகத்திற்கு சப்போர்ட்டாக பேசுகிறாள்.
ஷண்முகத்திற்கு சப்போர்ட் செய்பவர்களுக்கு அடுத்து நடக்க போவது என்ன என்பதை அடுத்த எபிசோடுகளில் பார்க்கலாம். இன்றைய எபிசோடை ஜீ தமிழ் தொலைகாட்சியில் பார்த்து ரசியுங்கள்.
மேலும் படிக்க | மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன் ஓடிடி.. வெளியானது அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours