இது தொடர்பாக கேட்கையில், ” என்னுடைய நண்பர் கவிதா என்பவர்தான் இந்தக் குறும்படத்தோட தயாரிப்பாளர். அவங்க இதுக்கு முன்னாடியே குறும்படங்கள் தயாரிச்சிருக்காங்க. இவங்க ஒரு பத்திரிக்கையாளரும்கூட. இவங்கள எனக்கு முன்னாடியே தெரியும். ஒரு நாள் ‘குறும்படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். நீ பண்றியா’னு கேட்டாங்க. அப்படிதான் இந்த குறும்படம் ஆரம்பமாச்சு.” என்றவர், “இந்த படத்துல சைக்கிள் ஓட்டுற சீன் ஒன்னு இருக்கு. நமக்கே ரொம்ப நாள் கழிச்சு சைக்கிள் ஓட்டுனா ஒரு மாதிரி இருக்கும்.
எனக்கு ஜனகராஜ் சார் மேல அதிகளவுல அக்கறை இருக்கு. இந்தக் காட்சியை அவர்கிட்ட சொன்னதும், ‘நான் சைக்கிள் ஓட்டி ரொம்ப நாள் ஆச்சு. ஆனா, நான் ஓட்டுறேன்’னு சொன்னார். நீளமான ரோட்டுல நாலு ரவுண்டு அவர் சைக்கிள் ஓட்டினார். அவர் இப்போ வரைக்கும் ஹெல்த், ஃபிட்னெஸ்ல விஷயத்துல ரொம்பவே சரியாகதான் இருக்காரு. அதுமட்டுமில்ல, இப்போகூட நடிப்பு மேல ரொம்பவே ஆர்வத்தோட ஈடுபாட்டோட இருக்காரு. இப்படியான விஷயங்கள் எனக்கு அவர் ஒரு சீனியர் நடிகர்ங்கிறதையே ஃபீல் பண்ண வைக்கல. விரைவில் இந்த ‘தாத்தா’ குறும்படம் வெளியாகிடும். எந்த தளத்துல வெளியாகும் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாங்க.” என முடித்துக் கொண்டார்.
+ There are no comments
Add yours