அஞ்சலி மேனன் இயக்கும் தமிழ் படம் : அதிகாரபூர்வ அறிவிப்பு
21 பிப், 2024 – 15:28 IST
மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குனர் அஞ்சலி மேனன். பெங்களூர் டேஸ், மஞ்சாடிக்குரு, உஸ்தாத் ஹோட்டல், கூடே ஆகிய திரைப்படங்களும், சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் வுமன்’ படமும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் அவர் இயக்கும் தமிழ் படம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனமான கேஆர்ஜி ஸ்டூடியோ தயாரிக்கிறது.
இதுகுறித்து அஞ்சலி மேனன் கூறும்போது, “கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் உடன் இணைய இருக்கும் இவ்வேளையில் மக்களை ஈர்க்க கூடிய வகையில் நமது கலாச்சாரத்தை மையமாக வைத்து உலகத்தரத்தில் படங்கள் எடுப்பதிலும், இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி, கதை நிலப்பரப்புக்களுக்கு அப்பால் பார்வையாளைகளை ஒன்றிணைத்து அவர்கள் மறக்கவே முடியாத, சிந்தனையைத் தூண்டுகிற அதே சமயம் பொழுது போக்கு நிறைந்த திரைப்பட பயணங்களுக்கு கூட்டி செல்ல ஆர்வமாக உள்ளோம்” என்றார்.
படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
+ There are no comments
Add yours