இந்தத் திருமணத்தை நடிகர் ராஜ்கிரண் வீட்டில் ஆதரிக்காததால், முனீஸ்ராஜா-பிரியா இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், “பிரியா என்னுடைய மகளே அல்ல’ எனக் கூறி தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். கல்யாணம் முடிந்து பிரியா முனீஸ்ராஜா வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், சில நாட்கள் கழித்து, முசிறி காவல் நிலையத்தில் முனீஸ்ராஜா – பிரியா மீது புகார் ஒன்றைக் கொடுத்தார் ராஜ்கிரணின் மனைவி பத்மஜா.
புகாரில் முனீஸ்ராஜா தரப்பிலிருந்து பணம் கேட்டுத் தொந்தரவு செய்தவதாகக் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக முனீஸ்ராஜாவிடம் நாம் அப்போது பேசியிருந்தோம். ‘என்னுடைய மனைவி பிரியாவைப் பெத்த அப்பா இப்ப எங்க கூடத்தான் இருக்கிறார். அவரும் பிரியாவைப் பெத்த அம்மா பத்மஜா என்கிற கதீஜாவும் பதினெட்டு வருஷமா கணவன் மனைவியாக வாழ்ந்தவங்க.
+ There are no comments
Add yours