அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும் போது, வெளிநாட்டில் வேலை செய்து செட்டிலாகிவிட்டு, தன் கனவை துரத்தி, தன் ஆசையை நோக்கி வந்து தமிழ்நாட்டில் “ரணம்” அறம் தவறேல் படம் எடுத்திருக்கிறார்கள்.
இது நாயகன் வைபவ் அவர்களுக்கு 25வது படம். அவர் இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும். 250 படங்கள் நடிக்க வேண்டும். அவருக்கு வாழ்த்துக்கள். நாயகி சரஸ் மேனன் உடன் பல படங்களில் பணியாற்றிவிட்டேன்… மிகச்சிறந்த திறமைசாலி, அட்டகத்தி நந்திதா, தான்யா ஹோப் என எல்லோருமே மிகச்சிறந்த தேர்வு. அறிமுக இயக்குநர் இப்படத்தை மிகவும் ரேசியாக எடுத்துச் சென்றிருக்கிறார். மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தை புதிய கோணத்தில், இப்படியெல்லாமா இருக்கும் என்று ஆச்சரியப்படுத்தும் தளத்தில் காட்டியிருக்கிறார். படத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படிப்பட்ட காலகட்டத்திலா நாம் வாழ்கிறோம் என்பதான எண்ணத்தை ஆழ்மனதில் இப்படம் விதைக்கும்” என்று பேசினார்.
நடிகை தான்யா ஹோப் பேசும் போது, எல்லோருக்கும் வணக்கம். இன்று முழுவதும் ரணம் அணியினருடன் இருந்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது, இந்நிகழ்விற்கு வருகை தந்திருக்கும் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். நான் இப்படத்தில் ஒரு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்த சக நடிகர் நடிகைகள்:, பிற தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். நீங்கள் படத்தைப் பாருங்கள். படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
நாயகன் வைபவ் பேசும் போது, சக்திவேலன் பேக்டரி சக்தி அவர்களுக்கு மிக்க நன்றி. சரஸ் மேனன் செய்திருக்கும் கதாபாத்திரம் யாருமே செய்ய மாட்டேன் என்று கூறினார்கள். ஷெரிஃப் எப்படி சம்மதிக்க வைத்தார் என்று தெரியவில்லை. தான்யா ஹோப் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஷெரிஃப் பற்றி இப்பொழுது தான் தெரியும். என்னிடம் யாரிடமோ வேலை பார்த்தேன் என்று தான் கூறினார். ஆனால் படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார். குறும்படம் எடுத்து இப்பொழுது மிகப்பெரிய இடத்தில் இருக்கும் இயக்குநர்கள் போல் ஷெரிஃப் வருவார். மது சாரை தமிழ் சினிமா உலகிற்கு வரவேற்கிறேன்.
உதய் என்னிடம் கணவன் மனைவி சண்டை போடுவது போல் சண்டை போடுவார். இன்று கூட ஒரு சண்டை நடந்தது.. ஒளிப்பதிவாளர் பாலாஜி அவர்களுக்கு நன்றி;. அவரின் பெயரை திரையில் பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவர் மனைவி இன்று உயிரோடு இல்லை. தாஸ் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையான கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா…? என்று அனைவரும் வியந்து போய் பார்ப்பார்கள்..
தளபதி படத்தின் கதை எனக்கு என்னவென்று தெரியாது. ஏனென்றால் வெங்கட் பிரபு சரோஜா காலத்தில் இருந்தே எனக்கு கதை சொல்லியது கிடையாது. ரஜினி சாருடனும் நடிக்க வாய்ப்பு அமைந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். எனக்கு எப்போதும் வரவேற்பு கொடுத்து வரும் நீங்கள் இப்படத்திற்கும் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours