இவருக்கும், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். `மாமா’ என்கிற கேப்ஷனுடன் இந்திரஜா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும், ரீல்ஸ்களையும் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் அவர்களுடைய திருமண நிச்சயதார்த்த விழா இன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான பலர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்திரஜா – கார்த்திக் தம்பதியை வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் விரைவிலேயே நடக்க இருக்கிறது. இந்த திருமணத்திற்கு சினிமா, அரசியல் எனப் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
வாழ்த்துகள் இந்திரஜா – கார்த்திக்!
+ There are no comments
Add yours