கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.
2013-ம் ஆண்டு வெளியான “நாஷா’ என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமானவர் பூனம் பாண்டே. ‘லவ் இஸ் பாய்சன்’ எனும் கன்னட படத்திலும், ‘மாலினி அண்ட் கோ’ எனும் தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். உலகக் கோப்பையை இந்தியா வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று இவர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இவர் பெயரிலான செயலி (App), கணவருடனான மோதல், பாலியல் வீடியோக்களுக்காக கைது என பாலிவுட்டில் பல சர்ச்சைகள் இவரது பெயரிலுள்ளது.
இந்நிலையில் 32 வயதுடைய அவர் கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கர்ப்பப்பை புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பூனம் பாண்டேவின் மறைவுச் செய்தி பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
+ There are no comments
Add yours