Body : Tamil Cinema Actress Trisha Kuvathur AV Raju Controversy : கடந்த இரண்டு நாட்களாக, ஊர் முழுவதும் த்ரிஷா குறித்த பேச்சுகள்தான் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. காரணம், அதிமுக கட்சியின் முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, கூவத்தூரில் ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் த்ரிஷா ஒன்றாக இருப்பதற்கு 25 லட்சம் கொடுத்தனர் என்று கூறிய விவகாரம்தான். தற்போது இந்த சூழல் போய்க்கொண்டிருக்க, சற்று திரும்பி பார்த்தால் த்ரிஷாவை குறிவைத்து பல சர்ச்சைகள் ஆரம்பம் முதலே வந்து கொண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. அப்படி, தான் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தது முதல், த்ரிஷா சந்தித்து வரும் சர்ச்சைகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
பாத்ரூம் வீடியோ:
2005ஆம் ஆண்டில், த்ரிஷா குளித்து கொண்டிருப்பது போன்ற இரண்டரை நிமிட வீடியோ விசிடி வாயிலாக வைரலானது. அப்போது, சைபர் க்ரைம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அன்று சமூக வலைதளங்கள் பெரிதாக வளர்ச்சி பெறவில்லை, விசிடி விற்கும் கடைகள்தான் அதிகமாக இருந்தன. அந்த மார்கெட்டிலேயே த்ரிஷாவின் பாத்ரூம் வீடியோ சிடியும் அதிமாக சட்டத்திற்கு எதிராக விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் த்ரிஷாவிடம் விசாரணை நடத்திய போது, அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்றும் யாரோ மார்ஃபிங் செய்து தனது முகம் இருப்பது போன்ற வீடியோவை பரப்பியுள்ளதாகவும் த்ரிஷா தெரிவித்திருந்தார்.
திருமண சர்ச்சை..
நடிகை த்ரிஷா, 40 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாதது, அவருக்கு பிரச்சனையாக இருக்கிறதாே இல்லையோ, அவரது ரசிகர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இவர், 2015ஆம் ஆண்டு தொழில் அதிபரான வருண் மணியன் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருந்தார். அதன் பிறகு, இந்த நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது. இதுவும் அன்றைய நாளில் பெரும் சர்ச்சையாக இருந்தது.
பார்ட்டி சர்ச்சைகள்..
நடிகர்-நடிகைகள் அடிக்கடி பார்ட்டிக்களுக்கு செல்வதும் மது அருந்துவதும் வழக்கம். நடிகை த்ரிஷாவும் பார்ட்டியில் ஜாலியாக இருப்பது போன்ற வீடியோ இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வைரலானது. இதுவும் ஒரு காலத்தில் சர்ச்சையானது.
திருமண சர்ச்சை..
கடந்த ஆண்டு, நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்த வதந்திகள் வெளியானது. இவர், ஒரு பிரபல டோலிவுட் இயக்குநரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், விரைவில் இந்த திருமண அறிவிப்பு குறித்த செய்திகள் வெளியாகும் என்றும் தகவல்கள் பரவியது. இதற்கு த்ரிஷா, இது போன்ற தகவல்கள் பரப்பும் குரூப் யாரென்று தெரியும் என்று கூறி, அந்த செய்திகளை மறுத்தார்.
மன்சூர் அலிகான் சர்ச்சை..
நடிகர் மன்சூர் அலிகான், லியோ படம் வெளியாகியிருந்த போது ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து பேசிய விஷயங்கள் சர்ச்சையாக மாறியது. முன்னர் தான் நடித்த படங்களில் எல்லாம் நடிகைகளை துரத்தி துரத்தி கற்பழிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்றும், த்ரிஷாவுடன் அப்படி நடிக்க லியோ படத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு த்ரிஷா கண்டன் தெரிவித்ததை அடுத்து, இது பெரும் சர்ச்சையாக மாறியது.
அனிமல் திரைப்படத்திற்கு ஆதரவு..
சில மாதங்களுக்கு முன்பு வெளியான அனிமல் படத்திற்கு, தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்தது. அப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா குறித்தும் ரண்பீர் கபூர் குறித்தும் அனைவரும் திட்டித்தீர்க்க, அந்த நேரத்தில் நடிகை த்ரிஷா, அனிமல் திரைப்படத்தை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ட்டோரி ஒன்றினை பதிவிட்டிருந்தார். அப்போது, “மன்சூர் அலிகானிற்கு எதிராக பேசிவிட்டு, இப்போ இந்த படத்தை போய் ஆதரிக்கிறாரே..” என பலர் த்ரிஷாவை விமர்சனம் செய்தனர். இதுவும் சர்ச்சையாக மாறியது.
கூவத்தூர் சர்ச்சை..
அதிமுக முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது, கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் த்ரிஷாதான் வேண்டும் என்று கூறி அடம் பிடித்ததாகவும், இதற்காக த்ரிஷாவிற்கு 25 லட்சம் கொடுத்து அழைத்து வரப்பட்டதாகவும், நடிகர் கருணாஸ்தான் இதற்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறினார். இதுதான், கடந்த 3 நாட்களாக ஹாட் டாப்பிக்காக உள்ளது.
மேலும் படிக்க | Vishal: “முட்டாளின் செயல்..” த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு நடிகர் விஷால் கண்டனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours