கடந்த சில ஆண்டுகளாகவே பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும்படியானத் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒரு சில திரைப்படங்கள் வசூலில் சாதனை படைத்திருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இந்தக் குறையைத் தீர்த்து வைத்து பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டுகளைக் குவித்தது ’12th ஃபெயில்’. இப்படத்தின் கதாநாயகன் விக்ராந்த் மாஸ்ஸியும் இந்தப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய விக்ராந்த் மாஸ்ஸி, தனக்குக் கிடைத்த இந்த மிகப்பெரிய வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருந்தார். அதுமட்டுமின்றி ‘மதம் மனிதனால் உருவாக்கப்பட்டது’ என்றும், தன் குடும்பத்தினர் குறித்தும் மனம் திறந்து பேசியிருந்தார்.
விக்ராந்த் மாஸ்ஸின் தந்தை – கிறிஸ்துவர், தாய் – சீக்கியர், அவரது சகோதரர் 17 வயதில் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர். இப்படிப் பல மதங்களைப் பின்பற்றும் தனது குடும்பத்தினர் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “எம் அம்மா சீக்கியர். என் தந்தை கிறிஸ்துவர், வாரம் இருமுறை தேவாலயம் செல்லுபவர். வீட்டில் லஷ்மி பூஜையும் செய்பவர்.
+ There are no comments
Add yours