இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் திருமணம் முடிவாகியிருக்கிறது. சமீபத்தில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருக்கிறது. நிச்சயதார்த்த விழாவின் புகைப்படங்களை ஐஸ்வர்யாவின் தங்கையும் நடிகையுமான அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தருண், இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர் எனத் தகவல்கள் பரவியதால், இது பற்றி விசாரித்ததில் கிடைத்தத் தகவல்கள் இனி…
இயக்குநர் ஷங்கர் இப்போது ராம்சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தையும், கமலின் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’ ஆகிய படங்களையும் இயக்கி வருகிறார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா, தங்கை அதிதியைப் போலவே டாக்டர். தோல் மருத்துவ நிபுணராக உள்ளார். ஐஸ்வர்யாவிற்கும் தருண் கார்த்திகேயனுக்கும் நிச்சயதார்த்தம் சமீபத்தில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது.
“இது காதல் திருமணம் அல்ல. மாப்பிள்ளை ஷங்கரின் மனைவி வழி உறவினராவார். சினிமாவில் உதவி இயக்குநர் இல்லை. சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
நிச்சயதார்த்த விழாவிற்கு இரு வீட்டாரின் நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தனர். ஐஸ்வர்யா – தருண் இவர்களின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது என்ற தகவலையும் தெரிவிக்கிறார்கள்.
+ There are no comments
Add yours