"தயவுசெய்து அநாகரீகமான கேள்விகளைத் தவிர்க்கவும்!" – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவேதிதா!

Estimated read time 1 min read

சின்னத்திரை நடிகையாக நமக்கு பரிச்சயமானவர் நிவேதிதா. சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ தொடரில் பிரகதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரும் இந்தத் தொடரின் கதாநாயகன் சுரேந்தரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் சேர்ந்து ரீல்ஸ்களும் பதிவிட்டு வந்தனர். ‘மகராசி’ தொடரில் நடித்திருந்த எஸ்.எஸ்.ஆர்யனும், நிவேதிதாவும் கணவன் – மனைவி என்பதால் இது தொடர்பாக பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன.

நிவேதிதா

தற்போது நிவேதிதாவும், சுரேந்தரும் ஜோடியாகச் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதள பக்கங்களில் வைரலாகின. பலரும், ‘உங்களுக்குத்தான் ஏற்கெனவே திருமணம் நடந்துவிட்டதே?’ எனப் பல்வேறு விதமாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக நிவேதிதா அவருடைய சமூகவலைதள பக்கங்களில் விளக்கம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில்,

“எனக்கு விவாகரத்தாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. நான் என் காதலைக் கண்டுபிடித்து விட்டேன். எனக்கு ஸ்பெஷலான ஒருவருடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய புரிதலையும், மரியாதையையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். தயவுசெய்து அநாகரீகமான கேள்விகள் கேட்பதைத் தவிர்க்கவும்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நிவேதிதா – சுரேந்தர்

விமர்சனங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது நிவேதிதாவே அவருடைய பர்சனல் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

இந்நிலையில் நிவேதிதாவும், சுரேந்தரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிவேதிதா – சுரேந்தர்

வாழ்த்துகள் சுரேந்தர் – நிவேதிதா!

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours