இன்னொருபுறம் இயக்குநர் திருமுருகனுமே ‘திரு பிக்சர்ஸ்’ சார்பில் புதிய சீரியல் ஒன்றிற்கு ஆடிஷன் நடத்தினார். கடந்த ஜனவரி முதல் தேதி ‘இந்த வருடம் சந்திக்கலாம்’ என அவரது நிறுவனம் சார்பில் சமூக வலைதளங்களில் பதிவும் வெளியாகியது.
இந்தப் பின்னணியில் தற்போது நம்பகமான சோர்ஸ் மூலம் நமக்குக் கிடைத்திருக்கும் தகவலின்படி, ‘மெட்டி ஒலி 2’ சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகப் போகிறது என்பது நிஜம்தான். அதேநேரம் தொடரை முதல் பாகத்தைத் தயாரித்த அதே ‘சினி டைம்ஸ்’ நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஆனால் தொடரை இயக்கப் போவது திருமுருகன் இல்லை.
அவருக்குப் பதிலாக இயக்குநர் விக்ரமாதித்யன் ‘மெட்டி ஒலி’ இரண்டாவது பாகத்தை இயக்கவிருக்கிறார்’ என்பதே அந்தத் தகவல்.
விக்ரமாதித்தன், திருமுருகன் ‘மெட்டி ஒலி’யை இயக்கிய போது செகண்ட் யூனிட் இயக்குநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours