இந்நிலையில், `Ungal Pandiyamma’ என்கிற பெயரில் புதியதொரு யூடியூப் சேனலைத் தொடங்கி இருக்கிறார் இந்திரஜா. அதில் இந்திரஜா – கார்த்திக் இருவரும் அவர்களுடைய திருமண தேதியை அறிவித்திருக்கிறார்கள். வருகிற மார்ச் மாதம் 24 ஆம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெற இருக்கிறதாம். அதையும் குறிப்பிட்டு அவர்களுடைய சேனலில் வீடியோவாகப் பதிவிட்டிருக்கின்றனர்.
இதனையடுத்து இருவரும் சேர்ந்து தொடர்ந்து அந்த யூடியூப் தளத்தில் வீடியோக்களை பதிவிடுவார்கள் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே ரோபோ சங்கர் குடும்பத்தினர் அரசியல் பிரபலங்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் நேரில் சென்று திருமண அழைப்பிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
வாழ்த்துகள் இந்திரஜா – கார்த்திக்!
+ There are no comments
Add yours