சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கம்பம் மீனா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் `பாக்கியலட்சுமி” தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்குச் சமீபத்தில் விபத்து ஏற்பட்டு கையில் அடிபட்டிருக்கிறது. அது தொடர்பான பதிவொன்றை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில்,
“தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது. இப்படித்தான் மனதைத் தேற்றிக் கொண்டேன்! எல்லாம் அவன் செயல்!” எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் ‘பாக்கியலட்சுமி’ ஷூட்டுக்கும் சென்றிருக்கிறார். கையில் ஏற்பட்டிருக்கும் முறிவு சரியாக மூன்று மாதங்கள் ஆகும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதே கையோடே ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவருக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் ‘உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என அக்கறையாக கமென்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.
+ There are no comments
Add yours