மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொடர் `ரோஜா’. அந்தத் தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தவர் சிபு சூர்யன்.
அந்தத் தொடரில் சிபு – பிரியங்கா ஜோடி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் இருவரும் சேர்ந்து நடிப்பார்களா எனக் கேள்வி எழுந்தது. அந்த சமயம் பிரியங்கா `சீதா ராமன்’ தொடரின் மூலம் ஜீ தமிழில் என்ட்ரியானார்.
பிறகு அந்தத் தொடரிலிருந்து விலகியவர் தற்போது ஜீ தமிழில் `நள தமயந்தி’ தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சிபு சூர்யன் விஜய் டிவியில் ஒளிபரப்பான `பாரதி கண்ணம்மா’ சீசன் 2வில் நடித்திருந்தார்.
சமீபத்தில் ஜீ தமிழில் புதிதாக வரவிருக்கும் தொடரில் கதாநாயகியாக வைஷ்ணவி அருள்மொழி நடிப்பதையும் அவருக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் நடிப்பதாகவும் தெரிவித்திருந்தோம். அந்தத் தொடருக்கு `சிவகாமி டெக்ஸ்டைல்ஸ்’ எனத் தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்தத் தொடருக்கு `வீரா’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.
அந்த ப்ரோமோவில் சிபு சூர்யன் இறந்து விட்டது போன்றும் அதன் பின்னர் குடும்ப பொறுப்பை வைஷ்ணவி ஏற்றுக் கொள்வது போலவும் கதை நகர்வதாகத் தெரிகிறது. அந்தப் ப்ரோமோ மூலம் சிபு அந்தத் தொடரில் கெஸ்ட் பர்ஃபார்மென்ஸ் தான் கொடுக்கிறார் என்பது தெளிவாகி இருக்கிறது. இதன் பிறகு இதே தொடரில் கதாநாயகனாக வருவாரா? தொடர்ந்து தொடரில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
+ There are no comments
Add yours