நடிகர் ராஜ்கிரண் மகள் ஜீனத் பிரியா – முனீஸ்ராஜா விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன.
நாங்கள் பிரிந்து விட்டோம் என முதன் முதலாக வீடியோ வெளியிட்ட பிரியா, தற்போது முனீஸ்ராஜா மீது பல குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். ‘குடித்துவிட்டு தினமும் அடிப்பார், ஏற்கெனவே வெறொரு பெண்ணுடன் திருமணம் நடந்திருந்தது’ என்பன போன்ற புகார்கள் அவற்றுள் முக்கியமானவை. ‘நான் பேசாமா ஒதுங்கிக்கிடலாம்னுதான் நினைச்சேன். ஆனால் அவர், என்னோட அம்மா, அப்பா பத்தியெல்லாம் தப்பா பேசுறார். அதனால் அவரைச் சும்மாவிடப் போறதில்லை’ எனப் பிரியா சொல்லி வருகிறார்.
இருப்பினும், முனீஸ்ராஜா இந்த விவகாரம் தொடர்பாக இதுவரைக்கும் எங்கும் வாய் திறக்கவில்லை. ‘சீக்கரமே இது குறித்து மீடியாவிடம் பேசுகிறேன். பிரியாவை எங்கிட்ட இருந்து பிரிச்சது யாரு? என்ன சதி நடந்ததுன்னு எல்லாவற்றையும் சொல்லுவேன்’ என்று ஒரேயொரு வீடியோ மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாக இருக்கிறார்.
இந்நிலையில் முனீஸ்ராஜா தரப்பிடம் பிரியா கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்பதற்காகத் தொடர்புகொண்டபோது,
“இந்த விவகாரம் வேறு எங்கோ திசைமாறிப் போய்க்கொண்டிருக்கிறது. அதனால்தான் முனீஸ்ராஜா இதுவரை பொறுமையா அமைதியா இருந்தார். வழக்கறிஞர்கள் கிட்ட ஆலோசிச்சிட்டு இருக்க அவர், வெகு சீக்கிரத்தில் பேசுவார்” என்றனர் அவரது நெருங்கிய நண்பர்கள்.
‘விவகாரம் திசை மாறுவதாக முனீஸ் தரப்பு எதைச் சொல்கிறது’ என அறிய மேலும் சிலரிடம் பேசினோம்.
“முதன் முதலா வீடியோவுல நாங்க பிரிந்து சில மாதங்கள் ஆகிடுச்சின்னு பிரியா சொன்னாங்களே, அது உண்மைதான். கடந்த தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி முனீஸ் வீட்டுல இருந்து கிளம்பி போயிருக்காங்க பிரியா. அவரை அவங்க அம்மாதான் கூப்பிட்டுப் போயிருக்காங்க. முனீஸ்ராஜா கூட ஓடிப்போய் ராஜ்கிரணை ரொம்பவே அவனமானப்படுத்திட்டார்னு பிரியாவை ரொம்பவே திட்டுனாங்க. ராஜ்கிரண் தரப்பினர்.
நிஜம் என்னான்னா, தன்னுடன் பிரியா வந்த பிறகு அவருடைய அம்மா, குடும்பம் பத்தி முனீஸ்ராஜா முதல்ல வெளியில் எதுவும் பேசல. பிரியா தன்னுடைய சொந்த மகள் இல்லைன்னு அவருக்கு முதல்ல சொன்னது ராஜ்கிரண்தான். இப்பக்கூட முனீஸ்ராஜா அமைதியா இருக்கிற சூழல்ல ஏன்னு தெரியல்ல அவரை மேலும் மேலும் மிரட்டுகிற மாதிரி சில நடவடிக்கைகள் ராஜ்கிரண் தரப்புல இருந்து நடந்துகிட்டிருக்கு. கொஞ்சநாள் முன்னாடி ஒரு தயாரிப்பாளர்கிட்ட இருந்து போன் முனீஸ்ராஜாவுக்கு வந்துச்சு
இந்த விவகாரத்தை இத்தோட விட்டுட்டு பேசாம ஒதுங்கிக்கோ. மேற்கொண்டு எதுவும் பேசாத. எந்த முயற்சிலயும் இறங்காத. ராஜ்கிரண்கிட்ட பணம் இருக்கு. அவரை எதிர்த்து உன்னால எதுவும் செய்ய முடியாது. பேசாம ஒதுங்கிக்கோ அதுதான் உன் கரியருக்கும் நல்லது. அதனால பிரச்னை பண்ணாம விலகி பிழைக்கிற வழியப் பாரு” எனப் பேசியிருக்கிறார்.
ஆரம்பத்துல முனீஸ்ராஜாவுடன் பிரியா வந்தப்ப இதே தயாரிப்பளர்தான் “எல்லாம் நல்லபடியா நடக்கும், கோபம் தணியட்டும், ராஜ்கிரண்கிட்ட நானே பேசி சமாதானம் செஞ்சு வைச்சிருக்கேன்” எனச் சொன்னாராம்.
” நலம் விரும்பி மாதிரி இருந்தவரையே என்னவோ பேசி மாத்தியிருக்காங்க” என்கின்றனர் இந்த விவகாரம் தெரிந்தவர்கள். முனீஸ்ராஜா இவ்விவகாரம் குறித்துப் பேசினால் வேறென்னென்ன விஷயங்கள் வெளிவரும் என்று தெரியவில்லை.
+ There are no comments
Add yours