இயக்குநர் எதிர்பார்த்த இந்தக் கதைசொல்லலுக்கு உறுதுணையாக இருக்கிறது மது நீலகண்டனின் ஒளிப்பதிவு. க்ளோஸ் அப் ஷாட்கள், லாங் ஷாட்கள், கட்டே இல்லாத நீண்ட நெடிய சிங்கிள் டேக் ஷாட்கள் எனப் பெரும்பாலான ப்ரேம்கள் ஓவியமாக கண்முன் நிற்கின்றன. ஆங்காங்கே மேடை நாடக பாணியிலான கேமரா நகர்வுகளும், காமிக்ஸ் பாணியிலான ப்ரேம்களும் கவனிக்க வைக்கின்றன. ஆனால், திரைக்கதையின் சொதப்பலால் இவை ஓவியமாக மட்டுமே மனதில் நிற்கின்றன.
பிரஷாந்த் பிள்ளையின் இசையில் ‘ராக்’ பாடல் மட்டும் ஆர்வம் தர வைக்கிறது. ஏனைய பாடல்கள் பார்வையாளர்களுக்குச் சோதனையே! பின்னணி இசையால் திரையில் பிரமாண்டத்தைக் கொண்டு வருகிறார் பிரஷாந்த் பிள்ளை. சாமுராய், மேற்கத்தியப் பாணி, எம்.ஜி.ஆர், பக்திப் பாடல்கள், நாட்டுப்புற இசைக் குறிப்புகள், பெர்சிய இசை எனக் கதாபாத்திரங்களுக்கும், நிகழ்வுகளுக்கும் கூடுதல் விளக்கம் தர முயன்றிருக்கிறது பின்னணி இசை.
தீபி.எஸ்.ஜோசப்புடைய படத்தொகுப்பின் நுணுக்கத்தைத் திருவிழா காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் உணர முடிகிறது. ஆனால், மொத்த படத்தையுமே மறுபார்வை செய்து, இன்னும் செறிவாகத் தொகுத்திருக்கலாம். அக்கால கோட்டைகள், மல்யுத்த மேடைகள், குதிரைத் திருவிழா எனக் கலை இயக்குநர் கோகுல் தாஸின் உழைப்பில் குறையேதுமில்லை. ரங்கநாத் ராவியின் ஒலி வடிவமைப்பு கவனிக்க வைக்கிறது.
+ There are no comments
Add yours