ஆண்டுதோறும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சர்வதேச அளவிலான கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும். வருடம் முழுவதும் பல்வேறு கோல்டன் கிளோப் விருதுகள் நடைபெற்றாலும் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
அவ்வகையில் இந்த 2024 ஆண்டிற்கான 81வது குளோப் விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இந்த விருதிற்காக 2023ம் வெளியான பல்வேறு படைப்புகள் தேர்வுப் பட்டியலில் விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் வென்றவர்களின் முழுப் பட்டியல் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.
இதில் ‘Oppenheimer’, ‘Barbie’, ‘Poor Things’, ‘Anatomy of a Fall’ உள்ளிட்ட திரைப்படங்கள் பல விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளன. விருதுகளை வென்ற படைப்புகள் மற்றும் கலைஞர்களின் முழு விவரங்கள் இதோ…

சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை
பார்பி (Barbie)
சிறந்த திரைப்படம் (டிராமா ஜானர்)
ஓப்பன்ஹெய்மர் (Oppenheimer)
சிறந்த திரைப்படம் (இசை/காமெடி ஜானர்)
புவர் திங்க்ஸ் (Poor Things)
சிறந்த திரைப்படம் (அனிமேட்டட் ஜானர்)
The Boy and the Heron
சிறந்த திரைப்படம் (ஆங்கிலம் அல்லாத பிறமொழி)
Anatomy of a Fall
சிறந்த இயக்குநர்
கிறிஸ்டோபர் நோலன் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த திரைக்கதை
ஜஸ்டின் ட்ரைட், ஆர்தர் ஹராரி (Anatomy of a Fall)
சிறந்த பாடல்
‘What Was I Made For?’ (Barbie) இசை மற்றும் பாடல் வரிகள் – Billie Eilish O’Connell, Finneas O’Connell
சிறந்த பின்னணி இசை
Ludwig Göransson (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகர் (டிராமா ஜானர்)
கிலியன் மர்பி (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த நடிகை (டிராமா ஜானர்)
லில்லி கிளாட்ஸ்டோன், (கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்)

சிறந்த நடிகை (இசை/காமெடி ஜானர்)
எம்மா ஸ்டோன் (புவர் திங்க்ஸ்)
சிறந்த நடிகர் (இசை/காமெடி ஜானர்)
பால் கியாமட்டி, (The Holdovers)
சிறந்த துணை நடிகர்
ராபர்ட் டௌனி ஜூனியர் (ஓப்பன்ஹெய்மர்)
சிறந்த துணை நடிகை
டாவின் ஜாய் ராண்டால்ஃப் (The Holdovers)
இதில் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் பெறும் முதல் கோல்டன் குளோப் விருது இதுதான். உலகெங்கும் ரசிகர்களைக் கொண்ட நோலனுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகவே ஆஸ்கர் விருதுக்கு ஒரு டிரெய்லராகவே கோல்டன் குளோப் விருதுகள் பார்க்கப்படுவதால், இந்த முறை நோலன் ‘ஓப்பன்ஹெய்மர்’ படத்துக்காகச் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதையும் முதன் முதலாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைக்காட்சிக்கான விருதுகள்
சிறந்த தொலைக்காட்சி சீரிஸ் (ட்ராமா ஜானர்)
Succession (HBO/Max)
சிறந்த தொலைக்காட்சி சீரிஸ் (இசை/காமெடி ஜானர்)
The Bear (FX)
சிறந்த தொலைக்காட்சி சீரிஸ் (ஆந்தாலஜி/லிமிடெட் சீரிஸ்)
Beef (Netflix)

சிறந்த நடிகை (டிராமா ஜானர்)
Sarah Snook (Succession)
சிறந்த நடிகர் (டிராமா ஜானர்)
Kieran Culkin (Succession)
சிறந்த ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை காமெடி
Ricky Gervais (Ricky Gervais: Armageddon)
சிறந்த நடிகை (இசை/காமெடி ஜானர்)
Ayo Edebiri (The Bear)
சிறந்த நடிகர் (இசை/காமெடி ஜானர்)
Jeremy Allen White (The Bear)

சிறந்த நடிகை (ஆந்தாலஜி/லிமிடெட் சீரிஸ்)
Ali Wong (Beef)
சிறந்த நடிகர் (ஆந்தாலஜி/லிமிடெட் சீரிஸ்)
Steven Yeun (Beef)
சிறந்த துணை நடிகை
Elizabeth Debicki (The Crown)
சிறந்த துணை நடிகர்
Matthew Macfadyen (Succession)
+ There are no comments
Add yours