"இது சீரியல்… அவ்வளவுதான்!" – விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த `சீதா ராமன்' ரேஷ்மா!

Estimated read time 1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `சீதா ராமன்’. இந்தத் தொடரில் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் ரேஷ்மா. இவர் `பாக்கியலட்சுமி’ தொடரில் ராதிகா கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் இந்த இரண்டு தொடர்களில் ஒரு தொடரிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

`சீதா ராமன்’ ரேஷ்மா

அதே போல `சீதா ராமன்’ தொடரில் அவர் இறந்தது போல காட்சிகள் அமைக்கப்பட்டன. எனவே அவர் அந்தத் தொடரிலிருந்து விலகினார் என உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நான்சி என்கிற கதாபாத்திரத்தின் மூலம் மறுபடியும் ரேஷ்மா `சீதா ராமன்’ தொடரில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். `இறந்தவர் எப்படி மீண்டும்?… அதுவும் புதிய கேரக்டரில்?’ என சீதா ராமன் தொடர் குறித்து பல்வேறு விமர்சனங்கள் சமூகவலைதள பக்கங்களில் எழுந்துள்ளன. நேற்று ரேஷ்மா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் ஆக ஆடியன்ஸூடன் இது குறித்துப் பேசியிருக்கிறார்.

அதில், “நான்சி என்கிற புதிய கேரக்டரில் மறுபடியும் சீதா ராமன் தொடரினுள் வந்திருக்கேன். வழக்கறிஞராக இதுல நடிக்கிறேன். பலரும் மகாலட்சுமி உயிரோட இருக்காங்களா? இவங்க ட்வின்ஸா? எப்படின்னு நிறைய கேள்விகள் கேட்டுட்டு இருக்கீங்க. இது சீரியல்! அவ்வளவுதான். எல்லாரும் சீதா ராமன் தொடரில் என்னை மிஸ் பண்றதாக சொல்லிட்டு இருந்தீங்க… அதனால மறுபடி அந்தத் தொடருக்குள் வந்துட்டேன். நிறைய சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு. எல்லாரும் நிறைய ஹார்டுஒர்க் பண்ணிட்டு இருக்கோம். கதைக்களம் சூப்பரா வரப் போகுது. தொடர்ந்து பாருங்க… உங்களுடைய சப்போர்ட் கொடுங்க!” எனக் கூறியிருக்கிறார்.

`சீதா ராமன்’ ரேஷ்மா

எது எப்படியோ இனி நான்சியாக ரேஷ்மா `சீதா ராமன்’ தொடரில் கன்டின்யூ ஆகப் போகிறார். வாழ்த்துகள் ரேஷ்மா!    

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours