சைரன் இரண்டாம் நாள் வசூல் நிலவரம்: ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகியுள்ளது. தற்போது இரண்டாம் நாள் கலெக்ஷன் எவ்வளவு என்று பார்ப்போம்.
சைரன் திரைப்படம்:
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி. அதன்படி தற்போது அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து கடந்த 16 ஆம் தேதி வெளியான திரைப்படம் சைரன். மேலும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதேபோல் ஜெயம் ரவியின் சைரன் படம், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையைக் கொண்ட இந்த அதிரடி திரில்லர் ஓடிடி நிறுவனமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு விற்கப்பட்டது.
முதல் நாள் வசூல் நிலவரம்:
இதனிடையே விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் அளவிலும் சைரன் மாஸ் காட்டி வருகிறது. முதல் நாளிலேயே நல்ல ஓபனிங் கிடைத்த சைரன் திரைப்படம் 1.40 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.
இரண்டாம் நாள் வசூல் நிலவரம்:
இந்நிலையில் தற்போது பாக்ஸ் ஆபிஸிலும் சைரனுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் கிடைத்துள்ளது. அதன்படி முதல் நாளை விட இரண்டாவது நாளில் அதிகம் கலெக்ஷன் செய்துள்ளது சைரன். அதன்படி சைரன் இரண்டாவது நாள் வசூல் 1.73 கோடி என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் 3.13 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளது சைரன் திரைப்படம். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் படங்களின் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Siren Celebrates Family Audience @actor_jayamravi @antonybhagyaraj @theHMMofficial pic.twitter.com/PLxjE8tdWT
— All India Jayam Ravi Fans Association (@JR_FansClubOffl) February 18, 2024
#SirenRunning Successfully @TheVetriCinemas
Grab Your Tickets now @bookmyshow @KeerthyOfficial@gvprakash@anupamahere@theHMMofficial@sujataa_HMM@iYogiBabu pic.twitter.com/4wGAFPiTJn— Vetri Cinemas (@TheVetriCinemas) February 18, 2024
#Siren is a refreshing change for @actor_jayamravi, showcasing his versatility in a role that taps into deep fatherly sentiments. His performance is, as expected,excellent. pic.twitter.com/QyrpluC6z8
— MD Ashik (@tisis_ashik) February 18, 2024
அதேசமயம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இறைவன் படம் படுதோல்வியடைந்த நிலையில், சைரன் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours