டிவி சீரியல் நடிகை ரஷமி தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதில்,”‘ரன்வீர் சிங் நடித்துள்ள விளம்பரம் அனைத்து டிவி துறை மற்றும் அதில் பணியாற்றுபவர்களை அவமானப்படுத்துவதாகவும், அறைந்தது போன்று உணர்கிறேன். டிவியை மக்கள் சின்னத்திரை என்று அழைத்தாலும் அதில்தான் மக்கள் செய்தி மற்றும் கிரிக்கெட்டைப் பார்க்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளனர். சின்னத்திரையைச் சேர்ந்த பலரும் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரன்வீர் சிங் தான் நடித்துள்ள போல்டு கேர் மாத்திரையின் விளம்பர தூதராகவும் இருக்கிறார்.
+ There are no comments
Add yours