Major Mukund Varadharajans Wife Indhu Overwhelming Note On Sivakarthikeyan Amaran | மேஜர் முகுந்தாக சிவகார்த்திகேயன்.. அமரன் படம் குறித்து மேஜர் முகுந்த் மனைவி நெகிழ்ச்சி

Estimated read time 1 min read

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம்: சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். ராணுவ வீரராக நடிக்க தனது உடம்பை ஃபிட்டாக மாற்றி அதற்காக கடினமான வொர்க்கவுட் செய்து ராணுவ வீரனாகவே மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் :
நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan), ஒரு பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். தனது பேச்சால் மக்களை பயங்கரமாக கவர்ந்த அவர், அடுத்து தனுஷ் உடன் 3 படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானார். இதையடுத்து இவருக்கு மெரினா படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், 10 ஆண்டுகளில் மளமளவென வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். 

மேலும் படிக்க | sandeep reddy: ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கிராமத்து கதாநாயகன் கதாப்பாத்திரம் நன்றாக பொருந்தி போக, அதே போன்று பல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், எங்க வீட்டுப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனிடையே தற்போது கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 :
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார், மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தை சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அதேபோல் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ராணுவ அதிகாரியாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கிறார். கடந்த 2022ஆம் ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான வேலைகளும் நடந்து வருகிறது.

எஸ்கே 21 – அமரன் :
இந்நிலையில் நேற்று 39வது பிறந்தநாளை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் 21வது படமாக அமரன் படத்தின் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக அமரன் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டார். அதில், ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் ஒவ்வொரு ஃபிரேமிலும் மிரட்டியிருந்தார். மேலும் இதில் மேஜர் முகுந்த் என்கிற சட்டையில் உள்ள நேம் பேட்ஜையும் காட்டி ஏற்கனவே கசிந்த தகவல் எல்லாம் உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

அமரன் படம் குறித்து நெகிழ்ச்சி பதிவு :
இதனிடையே மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்த படம் குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் கூறியாதவது.,

இந்நிலையில் அமரன் படத்தின் டைட்டில் டீசரை பார்த்து விட்டு மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வெளியிட்டுள்ள போஸ்ட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | Keerthy Suresh: ‘அந்தமாதிரி’ காட்சியில் நடிக்க சொன்னதால் பிரபல நடிகருக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours