`Non-Veg சாப்பிட மாட்டார்' – இலங்கையில் நிகழ்ந்த சங்கடம்; நடிகை சந்தோஷி விளக்கம்!

Estimated read time 1 min read

சினிமா, சீரியல் என சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை சந்தோஷி. பிறகு நடிப்பிலிருந்து அப்படியே ஒதுங்கி பொட்டிக் ஷாப் தொடங்கி, ஃபேஷன், மேக்-அப் பயிற்சி வகுப்புகள் என வேறொரு தளத்தில் பயணிக்கத் தொடங்கினார்.

இவரது பயிற்சி வகுப்புக்கு நல்ல கூட்டமும் வரத் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன் பயிற்சி வகுப்பின் கிளையை ஆந்திராவிலும் தொடங்கி தெலுங்கு தேசத்திலும் பிஸியானார். மேக்-அப் ஏரியாவில் இவரது வளர்ச்சி விறுவிறுவென வளர்ந்ததன் காரணமாக இவர் கலந்துகொள்ளும் ஒர்க்‌ ஷாப்புகள் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என வெளிநாடுகளிலும் நடக்கத் தொடங்கின.

இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன் இவர் கலந்து கொண்ட மேக்-அப் செமினார் ஒன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்தது.

ஆனால் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளில் அதிருப்தியடைந்த சந்தோஷி, அதுகுறித்து மேடையிலேயே தனது குமுறலைத் தெரிவிக்க, அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் உலா வரத் தொடங்கியிருக்கின்றன.

அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற சிலரிடம் நாம் பேசினோம்.

”சந்தோஷியின் செமினார்னா நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகத்தான் வந்திட்டிருக்கு. கொழும்புவில் நடந்த நிகழ்ச்சியில் சில சங்கடங்கள் நடந்தது நிஜம்தான். சந்தோஷியைப் பொறுத்தவரை தனக்கு ஏற்பட்ட கஷ்டங்களைக் கூடப் பொறுத்துக்கிட்டாங்க. ஆனா செமினார்க்கு வந்தவங்களும் சில சிரமங்களைச் சந்திச்சதுதான் அவங்களுக்கு கோபத்தை வர வச்சிடுச்சு. அதேநேரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இது எதிர்பாராத சிக்கல்தான். அவங்களுமே மேடையிலேயே அதுக்காக மன்னிப்பும் கேட்டுட்டாங்க” என்றனர் அவர்கள்.

சந்தோஷி

‘சாப்பாட்டு விஷயத்துலதான் முதல்ல பிரச்னை ஆரம்பிச்சது. அவங்க நான் வெஜ் சாப்பிட மாட்டாங்க. அந்த விஷயம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சரியாப் போய்ச் சேரலையா தெரியலை. அவங்களை நான் வெஜ் ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அதனால அங்க அவங்க சாப்பிடாம வெறும் ஜூஸ் குடிச்சு டின்னரை முடிச்சாங்க.

அதேபோல செமினாரில் கலந்து கொண்டவங்களுக்குமே சாப்பாடு ஒரு பொட்டலத்துல கொடுக்கப்பட்டதும், அதுவும் சரியான நேரத்துக்குத் தரப்படாததும் அவங்களைக் கோபப்படுத்திடுச்சு. “என்னுடைய வகுப்புக்கு வர்றவங்களுக்கு இவ்வளவு அசௌகரியங்கள் இதுக்கு முன்னாடி வந்ததே இல்லை. நீங்க செஞ்ச தப்புக்கு நான் என் ஸ்டூடண்ஸ்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிடுறேன்” என்றவர்,

சந்தோஷி

இந்த செமினார்ல கலந்துகிட்டவங்க ஒருவேளை அடுத்து நடக்கும் என் செமினார்கள்ல கலந்துக்கிட்டீங்கன்னா, அப்ப இன்னைக்கு நடந்த அசௌரியங்களைச் சரிக்கட்டும் விதமா கட்டணத்துல நிச்சயம் சலுகை தருவேன்” என மேடையிலேயே அறிவிக்கவும் செய்ததாகச் சொல்கின்றனர் நிகழ்ச்சி தொடர்புடைய சிலர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சி குறித்துச் சரியாக விளம்பரம் செய்யாமல் விட்டுவிட்டதால் போதிய கூட்டமும் இல்லையாம். எல்லாம் சேர்ந்து மொத்தமாக சந்தோஷியை அதிருப்தியாக்கி விட அப்செட்டிலேயே இந்தியா திரும்பியிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours