இது தொடர்பாக ஷாருக்கான் அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தியில்,”‘கடற்படை வீரர்கள் எட்டுப்பேர் விடுவிக்கப்பட்டதில் ஷாருக்கானுக்கு பங்கு இருப்பதாக வெளியான செய்தியில் எந்த வித உண்மையும் இல்லை.
இந்திய அரசுதான் அவர்களை விடுவித்தது. இதில் ஷாருக்கானுக்கு பங்கு இல்லை. இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தூதரகம்தான் மேற்கொண்டது. கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்டதில் நாட்டு மக்களைப்போன்று ஷாருக்கானுக்கும் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். ஷாருக் கான் சமீபத்தில் கத்தாரில் நடந்த கால்பந்துப்போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை கத்தார் பிரதமர் மொகமத் பின் கவுரவித்தார்.
+ There are no comments
Add yours