Serial Update: `மெதுவாக குணமடைந்து வருகிறேன்!' – வைரலாகும் நிவிஷாவின் பதிவு

Estimated read time 1 min read

சின்னத்திரை நடிகர்களுக்கு பழகிய முகம் நிவிஷா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `மலர்’ தொடரில் நடித்துக் கொண்டிருந்தார்.

பின்னர் அந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அவரே அறிவித்தார். இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இயங்கிக் கொண்டிருப்பவர். 

நிவிஷா

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், ` கடந்த சில நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. உடல்நலப் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

நிவிஷா

மெதுவாக குணமடைந்து வருகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன் என நம்புகிறேன்!’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாக கமென்ட் செய்து வருகின்றனர். விரைவில் குணமடைந்து வாருங்கள் நிவிஷா!

நிவிஷா

மலர் தொடரில் நிவிஷா விலகியதும் அவர் வேறு ஒரு தொடரில் கமிட் ஆகியதால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என ஒரு புறமும், இவருக்கு அந்தத் தொடரில் முன்னுரிமை வழங்கப்படவில்லை அதனால் தான் அந்தத் தொடரில் இருந்து விலகினார் என இன்னொரு புறமும் அது குறித்து பல தகவல்கள் வெளிவந்தன. ஆனால், நிவிஷா அது குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours