ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `இந்திரா’. இந்தத் தொடரில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கும் ஃபெளஸி (Fouzee) மற்றும் அக்ஷய் கமலை பேட்டிக்காக இந்திரா தொடரின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தோம்.
“ஏற்கெனவே ரெட்டை ரோஜா சீரியல் பண்ணிட்டு இருக்கும்போதே தான் இந்த சீரியல் வாய்ப்பு கிடைச்சது. அப்படித்தான் இதுக்குள்ள வந்தேன். நான் என்னுடைய ஒர்க்ல ரொம்பவே டெடிகேட்டட் ஆக இருப்பேன். என்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடிக்கிறேன். எஸ் ஜே சூர்யா சார் ஒருமுறை, `சினிமாவில் வேலை மட்டும்தான் பார்க்கணும். எப்ப பெரிய ஆள் ஆகுறோம்னுலாம் நினைச்சுக்கூடப் பார்க்கக் கூடாது’னு சொல்லியிருப்பார். அவர் சொன்னதை நான் அப்படியே ஃபாலோ பண்றேன்!” என்ற அக்ஷய் கமலைத் தொடர்ந்து ஃபெளஸி பேச ஆரம்பித்தார்.
“எனக்கு இந்த சீரியல் ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா அதுக்கு முன்னாடி நிறைய சீரியல்களில் சின்ன, சின்ன கேரக்டர் ரோல் தான் பண்ணிட்டு இருந்தேன். அந்த வகையில் ஜீ தமிழுக்கு நன்றி சொல்லியே ஆகணும். கேரக்டர் ரோல் பண்றவங்களுக்கும் மெயின் லீடாக நடிக்க வாய்ப்பு கொடுக்கிறது நல்ல விஷயம். லீடாக இருந்தாலும் சரி, கேரக்டர் ரோலாக இருந்தாலும் சரி அதுல முழு ஈடுபாட்டோட தான் நடிப்பேன்!” என்றதும் அக்ஷய் தொடர்ந்தார்.
“ஷூட்டிங் ஸ்பாட்ல கிட்டத்தட்ட 12 மணி நேரம் ஒர்க் பண்றோம். அப்படி ஒர்க் பண்ணும்போது நாம கூட இருக்கிறவங்க கம்பர்டபுளாக இருந்தா தான் நம்மளால ஒர்க் பண்ண முடியும். அப்படி எனக்கு கம்பர்டபுளான பர்சன் ஃபெளஸி. எனக்கு நிறைய மூட் ஸ்விங்ஸ் இருக்கும். செட்ல டக்குன்னு ஆஃப் ஆகிடுவேன். பர்சனலா எனக்கு கரியர் ரொம்பவே சென்சிடிவ் ஆன விஷயம். அப்படி நான் ஆஃப் ஆகும்போது ஃப்ரெண்ட்லியா பேசி என்னை பூஸ்ட் அப் பண்றது இவங்க தான். இந்த மாதிரி ஒரு ஃப்ரெண்ட் கூட ஒர்க் பண்ற ஸ்பேஸ்ல இருக்கிறது அவசியம்!” என அவர் சொல்லும்போதே ஃபெளஸி புன்னகைக்க அவர் குறித்து ஃபெளஸியிடம் கேட்டோம்.
“நான் எல்லாத்துக்கும் சிரிச்சிட்டே இருப்பேன். செட்ல ரொம்ப ஈஸியா இருப்பேன். இவர் தான் என்கிட்ட நீ ஜாலியா இருக்கிறதெல்லாம் ஓகே.. ஆனா, கொஞ்சம் ரெஸ்பான்சிபிள் ஆகவும் இருன்னு சொன்னார். அது என்னை கோபப்படுத்துற மாதிரியெல்லாம் இல்ல. அவர் சொன்னதை நான் எடுத்துக்கிட்டேன். ஒரு லீடாக என்னை செதுக்கினது அக்ஷய் தான்!” என்றதும் அக்ஷய் புன்னகைக்க அவரிடம் `உங்களுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிட்டதா சொல்றாங்களே?’னு கேட்கவும் ஃபெளஸி `அந்தக் கதையை நான் சொல்றேன்’ எனத் தொடர்ந்தார்.
“இப்படி வதந்தி எங்க செட்லேயும் பரவுச்சு. எல்லாரும் அக்ஷய்க்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்லிட்டு இருந்தாங்க. மேஜர் ஷாக் எனக்குத்தான் இருந்தது. அப்படி எல்லாரும் அது குறித்தே பேசிட்டு இருக்கவும் எங்க டைரக்டர் நேரடியாகவே அக்ஷய்கிட்ட கேட்டுட்டார் என்றவரை நிறுத்தி அக்ஷய் தொடர்ந்தார். கல்யாணங்கிறது நம்மளுடைய பர்சனல். அப்படி ஆனா சொல்லப் போறோம். சொல்லலைன்னாலுமே அது பர்சனல் சார்ந்த விஷயம். ஏன் இப்படி கிளப்பி விடுறாங்கன்னே தெரியல. நான் இப்பவரைக்கும் சிங்கிள் தாங்க! எனக்கு கல்யாணமெல்லாம் ஆகல!” என சிரித்தவர்களிடம் எதிர்காலத் திட்டம் குறித்துக் கேட்டோம்.
அப்போது ஃபெளஸி தனக்கு நேர்ந்த ஒரு நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்டார். “முதலில் நான் படம் தான் பண்ணினேன். படம் பண்ணப்ப அங்க யாரும் எனக்கு மரியாதை கொடுக்கல. ஷூட்ல இருக்கும்போது ஒரு டார்க் ஆன பிளேஸ்ல என்னை இறக்கிவிட்டுட்டு போயிட்டாங்க. அங்க நான் தனியா ரொம்ப நேரம் நின்னுட்டு இருந்தேன். அங்க யாரும் என்னை ஒரு பொண்ணு அங்க தனியா இருக்காங்கன்னு கூட யோசிக்கல. அன்னைக்கு நான் ரொம்ப அழுதேன். அப்ப தான் என் கரியர் ஆரம்பிச்ச புதுசு. கட் பண்ணினா சீரியலில் கேரக்டர் ரோல் பண்ணினேன். அங்க பொண்ணுக்காக எல்லாமே பண்றது, அவங்களை முன்னிலைப்படுத்துறது, மரியாதை கொடுக்கிறதெல்லாம் இருந்துச்சு. எனக்கு பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுத்தா போதும். அந்த மரியாதை சீரியலில் கிடைச்சது. சீரியல் பண்ணும்போது தான் டாடா படத்தில் நடிச்சேன். அந்தப் படம் பண்ணும்போது எனக்கு ரொம்ப கம்பர்டபுளா இருந்தது. அப்ப நானும் கொஞ்சம் மெச்சூர்ட் ஆகி இருந்தேன். டாடாவுக்குப் பிறகுதான் நாம கடந்து வரும் பாதையில் பல விஷயங்கள் நடக்கும். அதெல்லாம் கத்துக்கணுங்கிற புரிதல் வந்தது. இதுல இருந்து நெக்ஸ்ட் என்ன வருதோ அது கடவுள் கையில்தான் இருக்கு!” என்றவரைத் தொடர்ந்து அக்ஷய் பகிர்ந்து கொண்டார்.
“சீரியல் பண்ணிட்டு இருக்கும்போதே தான் பட வாய்ப்பும் வந்தது. நடிகன் ஆகணுங்கிறது எனக்குப் பிடிச்ச விஷயம். அதை ஏதோ ஒரு மீடியம் மூலமா நான் பண்ணிட்டே தான் இருக்கேங்கிறதுல எனக்கு ரொம்பவே சந்தோஷம்!” என்றார்.
இன்னும் பல விஷயங்கள் குறித்து அக்ஷய் – ஃபெளஸி நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!
+ There are no comments
Add yours