Bramayugam Review: மிரட்டும் மம்மூட்டி; இந்த பிளாக் அண்டு ஒயிட் ஹாரர் படம் எப்படியிருக்கிறது? | Bramayugam Review: Mammootty scares us in his horror outing

Estimated read time 1 min read

பிரமயுகம் விமர்சனம் | Bramayugam Review

பிரமயுகம் விமர்சனம் | Bramayugam Review

கொடுமன் போட்டியாகப் படம் முழுவதும் வீற்றிருக்கிறார் மம்மூட்டி. தன் ட்ரேட் மார்க்கான குரல், சிரிப்பு, உட்கார்ந்திருக்கும் தோரணை போன்றவற்றோடு, வசன உச்சரிப்பின் தொனி, மிரட்டலான பார்வை போன்றவற்றாலும், அக்கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கிறார். சில காட்சிகளில் அவரின் குரல், நிழல் கூட அவரின் இருப்பை ஈடுசெய்யும் வகையில் நம்மை நடுங்க வைக்கின்றன.

அர்ஜுன் அசோகனுடைய தேவன் கதாபாத்திரத்தின் வழியாகவே பார்வையாளர்களுக்குப் படம் விரிகிறது. ஒரு சாதுவாக வந்து, பயம், பதற்றம், நடுக்கும், கோபம், எழுச்சி எனப் பரிணமிப்பதோடு, எல்லா தருணத்திலும் அழுத்தமான நடிப்பைக் கோரும் அக்கதாபாத்திரத்தை, ஆழமாக உள்வாங்கி கச்சிதமாக கண்முன் கொண்டு வந்திருக்கிறார். தொடக்கத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், படத்தின் முக்கிய கட்டத்தில் பிரதானமாக உருமாறும் அக்கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து, தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் சித்தார்த் பரதன். மணிகண்டன்.ஆர், அமல்டா லிஸ் ஆகியோர் ஒரு சில காட்சிகளுக்கு மட்டும் தலைகாட்டி, எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போகிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours