கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான, இயக்குநர் குவென்டின் டாரன்டினோவின் ‘ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்’ படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதை பெற்றிருக்கிறார். இதனிடையே ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவர் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மீதும், தனிப்பட்ட வாழ்க்கை மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார்.
மேலும் இதுகுறித்து அமெரிக்க நாளிதழிடம் பேசியிருந்த பிராட், “நிறைய நடித்துவிட்டேன். இனி தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் என நினைக்கிறேன். மேலும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ஆர்வத்துக்கும் என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. சிற்பக்கலையிலும் புவி வடிவமைப்பிலும் எனக்கு நிறைய ஆர்வமிருக்கிறது. அதனால், அவற்றை கற்றுக்கொள்ளலாமென முடிவெடுத்துள்ளேன்” என்று கூறியிருந்தார்.
+ There are no comments
Add yours