”சமீபத்துல நான் வெளிநாடு போயிருந்தேன். அங்க இருக்கும்போது சக ஆர்ட்டிஸ்ட் ஃப்ரண்ட் ஒருத்தவங்க ஃபோன் பண்ணிட்டே இருந்தாங்க. அங்க இருந்தப்ப நான் ஃபோன் எடுக்கல. இங்க வந்ததும் என்னனு கேட்டப்ப, அவங்கதான் சொல்றாங்க. அதுவும் அவங்க என்னை எச்சரிக்க போன் பண்ணல. அந்தச் செய்தியை நிஜம்னே நம்பி, அந்த மாதிரி அவங்களும் சம்பாதிக்கலாமானு கேக்கக் கூப்பிட்டிருக்காங்க.
குறிப்பிட்ட அந்த லிங்கைக் கிளிக் செய்தா வெளிநாட்டுக்காரர் ஒருத்தர் பேசியதாகவும் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தச் சொல்லி அவர் கேட்டதாகவும், கட்டலாமானு எங்கிட்ட கேட்டார்.
அதுக்குப் பிறகுதான் நான் உஷாராகி புகார் வரைக்கும் போனேன்.
நான் இந்த மாதிரி சம்பாதிக்கிறேன்னு, நல்லா தெரிஞ்சவங்களே நம்பியிருக்காங்கன்னா என்ன சொல்றது? பிரபலமானவங்க, படிச்சவங்களே சுலபத்துல ஏமாந்துடுறாங்கன்னா மத்தவங்களை என்ன சொல்றது?
என் விளம்பரம் பார்த்து இதுவரை எங்கெங்க எத்தனை பேர் ஏமாந்தாங்களோ தெரியாது. அதனால என்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து இப்படி ஏமாத்திட்டுத் திரியற அந்த கும்பலைக் கைது செய்யச் சொல்லி போலீஸ்கிட்ட மறுபடியும் பேசலாம்னு இருக்கேன்” என்கிறார்.
+ There are no comments
Add yours