Serial Update: பூர்ணிமா செலுத்திய அஞ்சலி; `அவ்ளோதான்!' முடிவுக்கு வரும் தொடர்!

Estimated read time 1 min read

டெலிவிஷன் ஏரியாவில் நடந்த, நடக்கவுள்ள லேட்டஸ்ட் தகவல்களைப் பார்ப்போம்.

பரபரப்பாக இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது `பிக்பாஸ் தமிழ் சீசன் 7′ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் பூர்ணிமா. யூடியூப் தளத்தில் பிரபலமான இவர் போட்டியாளராக இந்த சீசனில் நுழைந்தார். இவருடைய விளையாட்டு சார்ந்து பல்வேறு விதமான விமர்சனங்கள் வந்தன. ஆனாலும், ஃபைனல் நெருங்கும் வரை உறுதியாகப் பயணித்தவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து 16 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வந்தனர். 

பூர்ணிமா

வீட்டிலிருந்து வெளியே வந்தவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூகவலைதள பக்கங்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர் `அமுதாவும் அன்னலட்சுமியும்’. இந்தத் தொடரின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கண்மணி. இவர் `பாரதி கண்ணம்மா’ தொடரின் மூலம் பிரபலமானவர். 

கண்மணி குணசேகரன்

கிட்டத்தட்ட 450 எபிசோட்கள் வரையில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகியுள்ள நிலையில் தற்போது இந்தத் தொடர் இறுதி அத்தியாயத்தை நெருங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்குப் பிறகு இதே சேனலில் கண்மணி வேறு ஒரு தொடரில் நடிக்கவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அது சார்ந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்றளவும் வெளியாகவில்லை.

`பிக் பாஸ்’ தமிழ் சீசன் 7 போட்டியாளராகப் பங்கேற்றவர் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவண விக்ரம். பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை, சமூகவலைதள பக்கங்களில் இவர் சார்ந்த செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டு வந்தன.

ஜோவிகா, விக்ரம், அக்ஷயா

இந்நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டிலிருந்து குறைவான வாக்குகள் பெற்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு ஜோவிகா, நிக்‌ஷன், அக்‌ஷயா மற்றும் அனன்யாவை சந்தித்திருக்கிறார். அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை `Always Be Happy’ என்கிற கேப்ஷனுடன் பதிவிட்டிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours