தமிழ்த் திரையுலகம் சார்பில் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தும் இந்த பிரமாண்ட விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, தனுஷ், நயன்தாரா உள்ளிட்டப் பலரும் கலந்துக் கொண்டு கலைஞர் கருணாநிதியின் கலை மற்றும் அரசியல் வாழ்வு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட தமிழ்நாட்டின் முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான மு.க.ஸ்டாலின்,
“என்னுடைய தலைமையிலான இந்த ஆட்சியில், ‘எம்.ஜி.ஆர் பிலிம் சிட்டி’யில் ரூ.25 கோடியில் படப்பிடிப்பு தளம் அமைத்துக் கொடுக்கப்படும். அதேபோல நடிகர் கமல்ஹாசன் வைத்த கோரிக்கையை ஏற்று பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பில் ஒரு திரைப்பட நகரமும் அமைத்துக்கொடுப்பேன்” என்று உறுதியளித்துள்ளார்.
+ There are no comments
Add yours