அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த வாரம் நிறைவடைய இருக்கிறது. நிகழ்ச்சி க்ளைமாக்ஸை நெருங்கி விட்ட நிலையில், யார், யாரெல்லாம் இறுதிச் சுற்றுக்கு வரப் போகிறார்கள், யார் டைட்டில் வெல்லப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. அர்ச்சனா, மாயா, விஷ்ணு, தினேஷ் எனப் பலரும் தங்கள் திறமைகளைக் கூடுமானவரைக் காட்டி, நிகழ்ச்சியைத் தங்கள் பக்கம் திருப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
முதலில் வழக்கம் போல் வாரம் முழுக்க நடந்தவை குறித்து விசாரித்தார் கமல். தொடர்ந்து எவிக்ஷன் நடைமுறைக்கு வந்தார். வெளியேற்றத்துக்கான நாமினேஷன் பட்டியலில் நேரடி பைனலிஸ்ட் விஷ்ணு தவிர மற்ற அனைவருமே இருந்த நிலையில் தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் உறுதிப்படுத்தப் பட்ட தகவல்படி இந்த வாரம் முதல் ஆளாக எலிமினேட்டாகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் விசித்ரா.
+ There are no comments
Add yours