பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலுமே கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் சம்பள விபரங்கள் உற்று நோக்கப்படுவதுண்டு.
‘புகழ் வெளிச்சம் தர்றதுடன் சாப்பாடு, சம்பளமும் தர்றாங்க’ எனப் போட்டியாளர்களே பிக் பாஸ் வீட்டுக்குள் பேசிக் கொண்ட சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன.
ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள், ஏன் சில சீசன்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலின் சம்பள விவரத்தைக் கூட நாமும் வெளியிட்டிருந்தோம். அந்த வகையில் பிக் பாஸ் 7வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பள விவரத்தையும் திரட்டினோம்.
இந்த சீசனில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்? யார் மிகவும் குறைவாக வாங்கியது? என்கிற விவரத்தைப் பார்ப்போம்.
விசித்ரா
பிக் பாஸ் சீசன் 7-ஐ பொறுத்தவரை அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் இவர்தான் என்கிறார்கள். விசித்ராவுக்கு ஒரு நாளுக்கு 30,000 ரூபாய் பேசப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சீனியர் நடிகை என்பதாலும் ஏற்கெனவே `குக்கு வித் கோமாளி’ முதலான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரவலாகக் கவனம் ஈர்த்தவர் என்பதால் சேனல் தாப்பில் இந்த சம்பளத்துக்குச் சம்மதித்தார்களாம்.
விஷ்ணு, யுகேந்திரன், கானா பாலா, ரவீனா:
`ஆபிஸ்’ முதலான விஜய் டிவி சீரியல்களில் நடித்த விஷ்ணு, பாடகர்கள் யுகேந்திரன், கானா பாலா மற்றும் ரவீனா ஆகியோருக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.25,000 பேசப்பட்டதாகத் தெரிய வருகிறது. யுகேந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே மலேசியாவிலிருந்து சென்னை வந்தார். ஆனாலும் சில வாரங்களிலேயே எவிக்ட் ஆகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். விஷ்ணு திறமையாக விளையாடி வருவதுடன் ‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்க் மூலம் முதல் ஆளாக இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றுவிட்டார். கானா பாலாவும் ஆர்வப்பட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்தான். ஆனால் சேனல் எதிர்பார்த்த கன்டென்ட் தரவில்லை என்கிற ஒரு ஆதங்கம் இவர் மீது சேனலுக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். 90 நாட்களை பிக் பாஸ் வீட்டுக்குள் கழித்த ரவீனா கடந்த வாரம் எவிக்ட் ஆனது நினைவிருக்கலாம்.
தினேஷ், மாயா, பிரதீப்
மாயா, பிரதீப் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் நிகழ்ச்சிக்குள் சென்ற தினேஷ் ஆகிய மூவருக்கும் ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 20,000 பேசப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இவர்களில் போட்டியாளர்கள் சிலர் புகார் தந்ததைத் தொடர்ந்து அதிரடியாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப் பட, மாயா, தினேஷ் இருவரும் தற்போது வரை நிகழ்ச்சியில் தொடர்கிறார்கள்.
கூல் சுரேஷ் முதல் வினுஷா தேவி வரை
யாரும் எதிராபாராத நொடியில் அதாவது இந்த சீசனில் கடைசி நிமிடத்தில் கமிட் ஆனவர் கூல் சுரேஷ். பொருளாதார ரீதியில் தான் மிகவும் கஷ்டத்திலிருப்பதாக சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியிட்ட அடுத்த சில மணி நேரங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்ததாகச் சொல்கிறார்கள். நாளொன்றுக்கு 15000 ரூபாய் இவருக்குச் சம்பளமாகப் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தவிர, அர்ச்சனா, அன்ன பாரதி, பிராவோ, பூர்ணிமா, ஐஷு, மணி, சரவண விக்ரம், அக்ஷயா, விஜய் வர்மா, வினுஷா தேவி என இந்த சீசனின் பெரும்பாலான போட்டியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூபாய் 15,000 பேசப்பட்டிருக்கிறதாம்.
இவர்களில் அர்ச்சனா, மணி, விஜய் வர்மா ஆகிய மூவரும் தற்போது வரை நிகழ்ச்சியில் தொடர்கிறார்கள். வைல்டு கார்டு மூலம் என்ட்ரி நிகழ்ச்சிக்குள் சென்றாலும் வலுவான ஒரு போட்டியாளராகத் திகழ்கிற அர்ச்சனா டைட்டில் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்ல்லை என்கிற பேச்சு அடிபடுகிறது.
வினுஷா தேவி நிகழ்ச்சியில் அவ்வளவு ஆர்வம் காட்டாதவராய் இருந்தார் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது.
பூர்ணிமா பணப்பெட்டி டாஸ்க் மூலம் பெட்டியில் வைக்கப்பட்ட ரூ.16 லட்சம் பணத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார்.
ஜோவிகா, நிக்சன், அனன்யா
இந்த சீசனில் குறைவான சம்பளம் வாங்கியவர்கள் என்றால் இந்த மூவரைத்தான் கை காட்டுகிறார்கள். இவரகளின் ஒரு நாள் சம்பளம் ரூ.10,000 எனச் சொல்லப்படுகிறது. இவர்களில் அனன்யா முதல் வாரமே எவிக்ட் ஆன நிலையில் வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மீண்டும் ஒரு வாய்ப்பு இவருக்குத் தரப்பட்டது. ஆனால் மறுபடியும் கூட நின்று ஆடாமல் சென்ற வேகத்தில் எவிக்ட் ஆகி விட்டார். ஜோவிகா மற்றும் நிக்சன் இருவருமே ஓரளவு கன்டென்ட் தந்தார்கள் எனச் சொல்லலாம்.
இந்த சீசனில் எவிக்ட் ஆகாமல் இறுதிவரை சென்றிருக்கலாம் என நீங்கள் நினைக்கும் போட்டியாளரின் பெயரைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!
+ There are no comments
Add yours