Bigg Boss 7: `எல்லோரும் மன்னிச்சிடுங்க!- வணங்கி வெளியேறிய பூர்ணிமா; முடிவெடுத்தது ஏன்?

Estimated read time 1 min read

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிறைவடைய இன்னும் ஒரு வாரம் மட்டும்  இருக்கும் நிலையில் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்  பூர்ணிமா.

பிக் பாஸில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த  பணப்பெட்டி டாஸ்க், நேற்று முன்தினம் தொடங்கியது. யார் இந்த டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே போவார்கள் என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல் உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் எதிர்பார்ப்போடு இருந்தனர். 1 லட்ச ரூபாயில் தொடங்கிய பணம் 12 லட்ச ரூபாயைத் தாண்டியும், யாரும் எடுக்காமல் இருந்தனர். அர்ச்சனாவும், விசித்திராவும்  நாங்கள் பணப்பெட்டியை தொடவே மாட்டோம் என்றும் கூறி வந்தனர்.

பூர்ணிமா

பூர்ணிமா 15 லட்சத்துக்கு மேலே வந்தால் நான் எடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.  கடைசியாகப் பணப்பெட்டியில்  16 லட்ச ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப்  பணத்தை பூர்ணிமா எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். விஜய் டிவி வெளியிட்டுள்ள புரோமோவில் பூர்ணிமா ரூ.16 லட்சத்தை எடுத்துக் கொண்டது காட்டப்பட்டிருக்கிறது. 

அந்த புரோமோவில் , “இந்த 16 லட்சத்தை எடுத்துக் கொண்டு நான் கிளம்புகிறேன்.  உங்கள் அனைவரையும் அட்டாக் பண்ணதுக்கு  என்னை மன்னிச்சிடுங்க”  என்று கூறியிருக்கிறார். பூர்ணிமா தனக்கு கிடைத்த வாய்ப்பை  சரியாக பயன்படுத்தி இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து பூர்ணிமாவை பலரும் பாராட்டி வருகின்றனர். 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours