ரசிகரின் செல்போனை வாங்கி வீடியோவை அழித்த அஜித்
05 ஜன, 2024 – 11:52 IST
நடிகர் அஜித்தை பொருத்தவரை தனது படப்பிடிப்பு நடக்கும் இடங்களில், தான் சுற்றுலா செல்லும் இடங்களில் எல்லாம் தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் அவர்களது மனம் கோணாமல் சந்தோசமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் மனிதர் தான். ஆனாலும் சமீபத்தில் தன்னை வீடியோ எடுத்த ஒரு ரசிகரின் மொபைல் போனை அவரிடம் இருந்து வாங்கி அந்த வீடியோவை டெலீட் செய்துவிட்டு பின் அவரிடம் மீண்டும் செல்போனை கொடுத்துள்ளார் அஜித். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அஜித் தன்னுடைய ரசிகர்களுடன் தாராளமாக புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் என்றாலும் அதை தன்னுடைய அனுமதியின் பேரில் ஒரு வரைமுறைக்குட்பட்டே அனுமதிக்கிறார். அவருடைய அனுமதியின்றி இந்த வீடியோ எடுக்கப்பட்டதால் தான், அஜித் கோபமாகி இதுபோன்று அந்த செல்போனை வாங்கி வீடியோவை அழித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் இந்த செயல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours