Actress Amala Paul Announces Pregnancy With Jagat Desai

Estimated read time 1 min read

Actress Amala Paul with Jagat Desai Instagram Post : மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை அமலா பால். இவர், தான் தாயாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறார். 

அமலா பால்: 

சிந்து சமவெளி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு  அறிமுகமானவர் அமலா பால். இவர் நடிப்பில் வெளியான ‘மைனா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, சில முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பை பெற்றார், அமலா. திரையுலகிற்கு வந்த வெகு சில நாட்களிலேயே மளமளவென பல படங்களில் நடித்து தள்ளி விட்டார். இவருக்கும், கோவாவில் சுய தொழில் செய்யும் ஜகத் தேசாய் என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியில் திருமணம் நடைப்பெற்றது. இவர்களின் திருமண நிகழ்வில் வெகு சில உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். இவர்களின் ஜோடி, சமீப சில மாதங்களாக ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக  பார்க்கப்பட்டது. 

தாயாக உள்ள அமலா பால்..

நடிகை அமலா பால், தான் தாயாக உள்ள செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உன்னுடன் இருக்கையில் 1+1=3 என்று அறிந்து கொண்டேன்” என குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான போட்டோ ஷூட், கடற்கரையில் நடந்துள்ளது. அமலா பால் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டதை ஒட்டி, ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அதுக்குள்ள குழந்தையா..

நடிகைகள், திருமணம் ஆன சில மாதங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள போவதாக அறிவித்தால், புரிதல் இல்லாமல் இருக்கும் மக்கள் பலர், “அதுக்குள்ள குழந்தையா” என்று கமெண்டுகளை வெளியிடுவது வாடிக்கையாகி வருகிறது. அப்படி, அமலா பாலின் பதிவிற்கு கீழும் பலர் இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எப்போதும் போல நடிகை அமலா பால் அந்த கமெண்டுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். 

மேலும் படிக்க | களத்தில் இறங்கிய டாப் ஸ்டார் பிரசாந்த்! நெல்லை மக்களுக்கு நலத்திட்ட உதவி!

வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்..

அமலா பாலிற்கு ரசிகர்கள் மட்டுமன்றி சில திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்களும், மலையாள நடிகர் நடிகைகளும் அமலா பாலை மனமாற வாழ்த்தியுள்ளனர். அமலா பால் நடிப்பில் அடுத்து மூன்று மலையாளப்படங்கள் வெளியாக உள்ளன. அதில் ஒரு படத்தின் படம் ரிலீஸிற்கு ரெடியாக உள்ள நிலையில், அடுத்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. 

முதல் திருமணமும்..சினிமா வாழ்க்கையும்..

அமலா பாலிற்கு, தமிழ் திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் 2014ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. ‘தெய்வ திருமகன்’ படத்தை இயக்கிய போது, இவர்கள் இருவரும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நல்ல நட்புடன் பழகிய இவர்கள், அடுத்து ‘தலைவா’ படத்திலும் ஒன்றிணைந்து பணிபுரிந்தனர். அந்த படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தொடங்கிய இவர்களின் காதல் அடுத்த ஆண்டே திருமணத்தில் முடிந்தது. ஆனால், 2016ஆம் ஆண்டே இவர்கள் சுமூகமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களின் திருமண முறிவு, தென்னிந்திய திரையுலகில் பெரிதாக பேசப்பட்டது. அதன் பிறகு, ஏ.எல்.விஜய் ஐஸ்வர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு 2020ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

மேலும் படிக்க | ரம்பாவை பின்னால் தட்டிய ரஜினி..! ஷாக்கான நடிகை..நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours