Actor Sathish’s Conjuring Kannappan OTT Release Date in Tamil : சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த காமெடி-பேய் படங்களுள் ஒன்று, கான்ஜூரிங் கண்ணப்பன். தியேட்டரில் அதிக வரவேற்பை பெற்ற இப்படம், ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ஓடிடியில் ரிலீஸ்:
கான்ஜூரிங் கண்ணப்பன் படம், இன்று (ஜனவரி 5) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து நெட்ஃப்ளிக்ஸ் சவுத் நிறுவனம் தங்களது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது.
Kanavula setha, nejathulayum saavu dhaan. Ellaam oru dreamcatcher oda vela thaan. #ConjuringKannappan is now streaming on Netflix in Tamil. Coming soon in Telugu, Malayalam and Kannada.#ConjuringKannappanOnNetflix pic.twitter.com/KrbT6g6Gjg
— Netflix India South January 5, 2024
அந்த பதிவில், “கனவுல செத்தா, நெஜத்துலையும் சாவுதான். எல்லாம் ஒர் ட்ரீம் கேட்சர் ஓட வேலைதான். கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தை தமிழில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
காமெடி-பேய் படம்:
தமிழ் சினிமாவில் பயமுறுத்தும், மயிற்கூச்சரிய செய்யும் அளவிற்கு பீதியை கிளப்பும் படங்கள் வந்தே பல வருடங்கள் ஆகி விட்டன. தற்போது வரும் படங்கள் அனைத்துமே காமெடி பேய் படங்களாக உள்ளன. காஞ்சனா படத்தில் ஆரம்பித்து கான்ஜூரிங் கண்ணப்பன் வரை பல படங்கள் அது போல காமெடி வகை பேய் படங்களாகவே இருக்கின்றன. முன்னர் பேய் படத்தை பார்க்க ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் மட்டுமே வந்து கொண்டிருப்பர். ஆனால், அதனுடன் காமெடியும் கலந்து இருப்பதால் குடும்ப ரசிகர்கள் இது போன்றா படங்களை தியேட்டருக்கு சென்று பார்க்க தொடங்கினர். அந்த வகையில், கான்ஜூரிங் கண்ணப்பன் படமும் குடும்ப ரசிகர்களை கவர்ந்தது.
கான்ஜூரிங் கண்ணப்பன் படத்தில் சதீஷிற்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். இந்த படத்தை செல்வின் ராஜ் சேவியர் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நாசர், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours