பெண் பார்க்கிற நிகழ்வுதானேன்னு தன்னுடைய சொந்தக்காரர்களில்கூட எல்லாருக்கும் தகவல் சொல்லாம ரொம்ப சிம்பிளா சிலரை மட்டும் கூட்டிக்கிட்டு இவங்க போயிருக்காங்க. அந்தப் பெண் வீட்டாரோ “விஜயகாந்த் பையனுக்கு எங்க பெண்ணைக் கேட்டு வர்றாங்க’ என்கிற ரீதியில் அங்கு சொன்னார்களோ என்னவோ, கோயம்புத்தூரிலிருந்த அத்தனை மீடியாகாரர்களும் அங்க வந்து குவிஞ்சிருந்தங்களாம்.
‘என்னங்க பொண்ணுதானே பார்க்க வந்திருக்கோம். எதுக்கு மீடியாவுக்கெல்லாம் சொன்னீங்க’ என பிரேமலதா கேட்டதற்கு, ‘நாங்க யாரும் சொல்லலை. மீடியாக்காரங்க எப்படியோ நீங்க வர்ற தகவல் தெரிஞ்சு வந்துட்டாங்க’ எனப் பதில் சொல்லியிருக்காங்க.
அதுவும் போக சிம்பிளா வீட்டுல இதை நடத்தாம, இந்த பெண் பார்க்கிற நிகழ்ச்சிக்காக ஒரு கல்யாண மண்டபத்தையே வாடகைக்குப் பிடிச்சிருக்காங்க. பெண் பார்க்கும் படலத்தை அவங்க தரப்பு ஊரைக்கூட்டி இப்படி விளம்பரப்படுத்தும்னு பிரேமலதா எதிர்பார்க்கவே இல்லையாம். அதனால கோயம்புத்தூர் போய் இறங்கி இதையெல்லாம் பார்த்ததுமே அவங்க ரொம்பவே அப்செட்.
கல்யாணத்துக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப் போரா இருக்கே… திருமணம் முடிஞ்சா இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாங்களோனு திகைச்சிட்டாங்க.
அதனால போன இடத்துல பெண்ணை மட்டும் பார்த்துட்டு, ‘சென்னை போய் எல்லார்கிட்டயும் கலந்து பேசி பதில் சொல்றோம்’ எனச் சொல்லி விட்டு வந்துவிட்டார்களாம்.
பெண் வீட்டாரின் அதிகப்படியான ஆர்வமே பிரேமலதாவை எரிச்சல் படுத்த, ‘இந்தச் சம்பந்தம் சரிப்பட்டு வராது’ என முடிவெடுத்துட்டார்” என்கிறார்கள் அவர்கள்.
+ There are no comments
Add yours