பின்பு சேஷாத்ரி என்பவரின் சாந்தி நிகேதனில் சேர்ந்து சத்திய சோதனை நாடகத்தில் நடித்தார். அவரது நடிப்புத் திறமையைப் பார்த்த ஒய்.ஜி பார்த்தசாரதி தனது நாடகக் குழுவில் சேர்த்துக்கொண்டார்.
நாடகங்களில் நடித்துவந்தவர், நாடகங்களை எழுதி இயக்க தனியே `ஸ்டேஜ் இமேஜ்” என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார். புதுமையான கதையம்சம், காட்சி அமைப்புகளைக் கொண்ட நாடகங்களை அரங்கேற்றம் செய்தார். மொத்தம் 13 நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கி ரசிகர்களால் கவனிக்கப்பட்டார் லியோ பிரபு.
`நான் மகான் அல்ல’, `பருவ காலம்’, `புதிர், `பேர் சொல்லும் பிள்ளை’, `இரண்டும் இரண்டும் அஞ்சு’, `இது எங்க நாடு, `அண்ணே அண்ணே’ போன்ற திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
`ஈ -நாடு’ படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ராம நாராயணனின் `இது எங்க நாடு’ படத்தில் நடித்த கதாபாத்திரத்தால் அதிகம் பாராட்டப்பட்டார். தமிழ் நாடகத் துறைக்கு இவரின் பங்களிப்பு முக்கியமானது. அதன் மூலம் உலகத் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டவர். அந்த அடிப்படையில் தமிழக அரசு இவருக்கு 1990 ஆம் ஆண்டில் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.
நாடக எழுத்தாளர், திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி புனைவு எழுத்தாளராகவும் பங்களித்தார். அதோடு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி நடித்தவர், ஊடகவியலாளராகவும் பணியாற்றினார்.
கலைத்துறைக்கு இவ்வளவு பங்களிப்பு செய்த லியோ பிரபு வயது முதிர்வால் மரணமடைந்ததற்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவொரு அனுதாபத்தையும் தெரிவிக்கவில்லை” என்று வருத்ததுடன் தெரிவித்தனர்.
+ There are no comments
Add yours