Ilayaraja Composed Music Regardless Of Money Says Vattara Vazhakku Director | பணத்தை பொருட்படுத்தாமல் இளையராஜா இசையமைத்தார் இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்

Estimated read time 1 min read

டூ லெட் சந்தோஷ், ரவீனா ரவி, வெங்கடேசன், விசித்திரன் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘வட்டார வழக்கு’. மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.கந்தசாமி, கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.  80 காலகட்டத்தில் மதுரை மாவட்டத்தில் இரு குடும்பத்துக்கு இடையேயான பகைதான் வட்டார வழக்கு படத்தின் கதை.  இந்த பகையுணர்வு இரண்டு குடும்பங்களிலிருந்தும் பலரை காவு வாங்குகிறது. இந்த பகைக்கு இடையிலும் காதல் மலருகிறது. இறுதியில் பகை வென்றதா அல்லது காதல் வென்றதா என்பதே படத்தின் கரு.  கடந்த டிசம்பர் 29ம் தேதி படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.  

மேலும் படிக்க | விஜயகாந்தின் இறப்பிற்கு வடிவேலு ஏன் வரவில்லை? மன்சூர் அலிகான் கொடுத்த பதில் இதோ!

இந்நிலையில் கோவை ப்ராட்வேஸ் சினிமாஸில் ரசிகர்களை சந்தித்த வட்டார வழக்கு திரைப்பட குழுவினர் செய்தியாளர்களிடம் பேசினர். இதில் படத்தின் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் பேசுகையில், இது 1985-ல் நடப்பது போன்ற கதை களத்தை கொண்ட இதில், ஒரு வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இந்தப் படம் பேசுவதால் ‘வட்டார வழக்கு’ என்று தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்தார்.  மதுரை மேற்கு பகுதியில் உள்ள கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ள படமாக கிராமத்து பின்னணியில் இருப்பதால், இசைஞானியை அணுகியதாக குறிப்பிட்ட அவர், இந்த படத்தில் அவரது இசைதான் ஹீரோ என்றார். அவரது இசை, இந்தப் படத்துக்குப் பெரியபலம் என்று கூறிய அவர் ,என்னிடம் போதுமான பொருளாதாரம் இல்லாதபோதும் அவர் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அவரே விரும்பி இந்த படத்திற்கு இசையமைத்தார் என நெகிழ்ச்சி பட தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நாயகி ரவீனா ரவி பின்னணி குரல்கள் நிறைய பேசி இருந்தாலும் இந்த படத்தில் கிராமத்து பேச்சு வழக்கை  தாம் கொஞ்சம் சிரமபட்டே பேசியதாக தெரிவித்தார். சில நேரங்களில் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில்  நடிகைகளுக்கு போதுமான வசதிகள் கிடைக்காமல் இருப்பது வருத்தம்தான் என்றாலும், இது போன்ற கிராமத்து பின்னனி படங்களுக்கு அதுவே பெரிய அனுபவமாக இருப்பதாக தெரிவித்தார்.

முன்னதாக இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருந்த இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன், இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போகும்போது எல்லாம் எங்களை உற்சாகம் குறையாமல் படக்குழுவினர் பார்த்துக் கொண்டனர். இவர்கள் எண்பது சதவீதம் பேர் சம்பளம் வாங்காமல் வேலை பார்த்துள்ளனர். சிறு சிறு விஷயங்களுக்கு கூட எங்களை எதிர்பார்க்காமல் அவர்களது சொந்த காசை செலவு செய்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். கேபிள் சங்கர் சார், சித்ரா லட்சுமணன் சார் எனப் பலரும் எங்களுக்கு வழிகாட்டி, பொருளாதார உதவி வரை செய்தனர். பின்னணி இசையை நம்பி இருக்கக்கூடிய படம் இது. இந்தக் கதைக்கு ராஜா சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். படத்தைப் பார்த்துவிட்டு அவர் சம்மதம் சொன்னார். 

ஒரு சின்ன படத்திற்கான அடிப்படைத் தேவைக்கான செலவு மட்டும் தான் ராஜா சார் கேட்டிருந்தார். ஆனால், அவர் கேட்டதில் 60% தான் என்னால் கொடுக்க முடிந்தது. 40% பணம் என்னிடம் இல்லை. அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாது இசையை செய்து தருவதாக சொன்னார். அவர் காலில் விழுந்து விட்டேன். 12 நாட்கள் ஒரு தியானம் போல, இதன் பின்னணி இசையை செய்து கொடுத்தார். நல்ல படம் என்பதால், இதற்குப் பலரும் எந்தவிதமான எதிர்பார்பும் இல்லாமல் ஆதரவு கொடுத்தனர். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் சார் எப்பொழுதும் நல்ல படம்தான் எடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். பத்திரிக்கையாளர்களின் உதவியோடு அவரை அணுகினேன். அவருக்கும் படம் பிடித்து சம்மதம் சொன்னார். சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவிமர் அனைவருக்கும் நன்றி என்று பேசி இருந்தார்.

மேலும் படிக்க | தெலுங்கிற்கு ஒரு பாகுபலி! தமிழுக்கு ஒரு அயலான் – தயாரிப்பாளர் ராஜேஷ் பேச்சு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours