”திரைப்பட கல்லூரி மாணவர்கள் மீது தனி மதிப்பு வைத்திருப்பவர் கேப்டன். நானும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவன் என்பதால் இனிமையாகப் பழகுவார். நான் ஒளிப்பதிவாளர் சரவணன் சார் ஒளிப்பதிவு செய்த ‘வல்லரசு’, ‘வாஞ்சிநாதன்’, ‘தவசி’, ‘தர்மபுரி’ படங்கள்ல இணை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தேன்.
விஜயகாந்த் சார் படங்கள்ல ஆக்ஷன் சீக்குவென்ஸ்னாலே சிறப்பா இருக்கும். அந்த காலத்திலேயே மூணு, நாலு கேமராக்கள் வச்சு எடுத்திருக்கோம். அப்ப ஃபிலிம்னால, நான் கேமராவைக் கையாளும்போது ஒரு வித பயம் இருக்கும். ஆனா, கேப்டனோ, ‘நீங்க சரியா பண்ணிடுவீங்க’னு சொல்லி, எனக்கு தைரியம் கொடுத்துட்டுப் போவார். அப்பவெல்லாம் கேரவன் வசதி கிடையாது. கேமரா பக்கம் இருக்கற சின்ன ஸ்டூல்ல தான் அவர் உட்கார்ந்திருப்பார்.
அவரோட படங்கள்னாலே பொது இடங்கள்ல தான் படப்பிடிப்பு நடக்கும். ஷூட்டிங்னாலே வேடிக்கை பார்க்கற கூட்டமும் அதிகமாகிடும். இன்னிக்கு பவுன்சர்கள் வச்சு, கூட்டத்தை கண்ட்ரோல் பண்றாங்க. இந்த செட்டப் அப்ப கிடையாது. விஜயகாந்த் சார் படப்பிடிப்புனாலே கூட்டம் இன்னும் அதிகமாகிடும். ஆனாலும், அவ்வளவு கூட்டத்தையும் அவர் அழகா கையாள்வார்.
+ There are no comments
Add yours