என்னை அறிமுகம் செய்த இரண்டு பேருமே உயிரோடு இல்லை : நடிகை நமீதா வேதனை
30 டிச, 2023 – 13:47 IST

சித்திக் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் எங்கள் அண்ணா. இந்த படத்தில் தான் நடிகை நமீதா அறிமுகமானார். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், எங்கள் அண்ணா படத்தில் தான் நான் அறிமுகமானேன். அந்த படத்தின் நாயகன் விஜயகாந்த் மற்றும் டைரக்டர் சித்திக் ஆகிய இருவருமே எனக்கு பெரிய அளவில் உதவி செய்தார்கள். அவர்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் அப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு இருப்பேன். என்னை புதுமுக நடிகை என்று யாரும் நினைக்கவில்லை. அந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று கூறியிருக்கும் நடிகை நமீதா, அப்படத்தின் இயக்குனர் சித்திக் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் காலமானார். அவரை தொடர்ந்து தற்போது கேப்டன் விஜயகாந்த்தும் காலமாகி விட்டார். என்னுடைய முதல் படத்தின் இரண்டு மிகப்பெரிய தூண்களும் தற்போது இல்லை என்று நினைக்கும் போது மனதுக்கு மிகப்பெரிய வேதனை அளிக்கிறது. அதோடு எங்கள் அண்ணா படத்தில் நடித்த போது கேப்டன் விஜயகாந்தின் குணத்தை அருகில் இருந்தே பார்த்து நான் வியந்து இருக்கிறேன். அப்படிப்பட்டவரை தற்போது இழந்திருப்பதை மிகப்பெரிய இழப்பாக கருதுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் நமீதா.
Advertisement
இதையும் பாருங்க !
வரவிருக்கும் படங்கள் !

- நா நா
- நடிகர் : சசிகுமார் ,
- இயக்குனர் :NV நிர்மல்குமார்

- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா

- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா

- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
Tweets @dinamalarcinema
+ There are no comments
Add yours