மனதில் நிலைத்து நின்றவர்கள்…! – 2023ல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தமிழ் திரைப்பிரபலங்கள்

Estimated read time 1 min read

மனதில் நிலைத்து நின்றவர்கள்…! – 2023ல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய தமிழ் திரைப்பிரபலங்கள்

31 டிச, 2023 – 14:42 IST

எழுத்தின் அளவு:


Tamil-cinema-clebrities-who-died-in-2023

2023ம் ஆண்டு சினிமாவுக்கு நல்ல விஷயமாக இருந்தாலும், எதிர்பாராக இழப்புகளும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மயில்சாமி: திரையுலகில் நகைச்சுவை மன்னனாகவும், மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வள்ளலாகவும் வாழ்ந்தவர் மயில்சாமி. கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி மாரடைப்பபால் காலமானார்.

மனோபாலா: இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா கடந்த மே 3ம் தேதி உடல்நல குறைவு காரணமாக மறைந்தார்.

மாரிமுத்து: வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என கலக்கி கொண்டு இருந்தவர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியலால் மக்களை வெகுவாக கவர்ந்த மாரிமுத்து செப்டம்பர் 8ம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்தார்.

வாணி ஜெயராம்:
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியவர் பின்னணி பாடகி வாணி ஜெயராம். பிப்ரவரி 4ம் தேதி தனது வீட்டில் இறந்து கிடைத்ததாக அதிர்ச்சி செய்தி வெளிவந்தது. பின் கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டதால் தான் இறந்தார் என்பது தெரியவந்தது.

ஜூனியர் பாலையா: பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஜூனியர் பாலையா நவம்பர் 2ம் தேதி மூச்சு திணறல் காரணமாக இறந்தார்.

டி.பி.கஜேந்திரன்: தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றிய டி.பி.கஜேந்திரன் உடல்நல குறைவு காரணமாக பிப்ரவரி 5ம் தேதி மறைந்தார்.

ஆர்.எஸ். சிவாஜி: தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் ஆர்.எஸ். சிவாஜி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

சரத்பாபு: எந்த ஒரு கதாபாத்திரத்திலும் ஜொலிக்க கூடிய நட்சத்திரங்களில் ஒருவர் சரத்பரபு. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால், உடல் உறுப்புகள் செயல் இழந்து போனதன் காரணமாக கடந்த மே 22ம் தேதி மறைந்தார்.

கே. விஸ்வநாத்: சாகர் சங்கமம், ஸ்வாதி முக்தியும் என பல நல்ல நல்ல திரைப்படங்களை திரையுலகிற்கு கொடுத்த இயக்குனரும் நடிகருமானவர் கே. விஸ்வநாத். இவர் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 2ம் தேதி மறைந்தார்.

‛நெல்லை’ தங்கராஜ்: பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நெல்லை தங்கராஜ். இவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி மரணமடைந்தார்.

கே.கே. ரத்னம்: ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஜூடோ ரத்னம் என்கிற கே.கே. ரத்னம். இவர் 93வயதில் மறைந்துள்ளார்.

சங்கரன்: திரையுலகில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் தனது 92 வயதில், வயது மூப்பு காரணமாக மரணமடைந்தார்.

விஜயகாந்த் : நடிகரும், தேமுதிக., தலைவருமான விஜயகாந்த் (71) உடல்நலக் குறைவால் சென்னையில் டிச., 28ம் தேதி காலமானார்.

லியோ பிரபு : பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் டிச., 30ல் காலமானார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours