Sivakarthikeyan Salary In Ayalaan | அயலான் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு

Estimated read time 1 min read

அயலான் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அயலான் திரைப்படம்:
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கி அறிமுகமானவர், ஆர்.ரவிகுமார். இதையடுத்து அவர் இயக்கும் அடுத்த அறிவியல் சார்ந்த படம், அயலான். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, ரகுல் பிரீத் சிங் அவருக்கு ஜோடியாக வருகிரார். இப்படத்தின் பணிகள் 5 வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக பல ஆண்டுகளாக தொடர்ந்து பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் முதல் சிவகார்த்திகேயனின் படமாகும். 

வாய்ஸ் கொடுக்கும் நடிகர்:
அயலான் படத்தில் சிவாகர்த்திகேயனுடன் படம் முழுக்க ட்ராவல் செய்யும் கேரக்டர்தான் அந்த ஏலியன். இந்த கதாப்பாத்திரத்திற்கு பிரபல நடிகர் ஒருவர் வாய்ஸ் கொடுத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, சித்தார்த்தான். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சித்தா’ பட ஹீரோவான சித்தார்த், நடிப்பை தவிர சினிமா துறையில் பல அவதாரங்களை எடுத்துள்ளார். சிறுவதிலேயே ஒரு பிரபல் விளம்பரத்திற்கு வாய்ஸ் கொடுத்துதான் சித்தார்த் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். கொஞ்சம் திரைத்துரையில் வளர்ந்த பிறகு, சந்தோஷ் சுப்புரணியம் படத்தில் இடம் பெற்றிருந்த ‘அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்’ பாடலை பாடியுள்ளார். இது மட்டுமல்ல, இன்னும் பல பாடல்கள் இவரது வாய்ஸில் வெளிவந்துள்ளன. 2019ஆம் ஆண்டு வெளியான தி லயன் கிங் படத்தில் வளர்ந்த் சிம்பாவிற்கு வாய்ஸ் கொடுத்ததும் இவர்தான். தற்போது அயலான் படத்தில் இவர் குரல் இடம் பெற்று இருக்கிறது.

மேலும் படிக்க | தெலுங்கிற்கு ஒரு பாகுபலி! தமிழுக்கு ஒரு அயலான் – தயாரிப்பாளர் ராஜேஷ் பேச்சு!

அயலான் ரிலீஸ் எப்போது? 
அயலான் திரைப்படத்தின் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் மொத்தம் 4,500 வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுளதாம். இதுவரை வெளிவந்துள்ள இந்திய சினிமாக்களிலேயே அதிக வி.எஃப்.எக்ச் காட்சிகள் கொண்ட படம், இதுதான். இப்படம், இந்த வருட தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட வேலைகள் இன்னும் முடியாததால் இதனை அடுத்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான் திரைப்படம் வெளியாகின்றது. இப்படம் ஏலியன் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவிற்கு இந்த கதைக்களம் புதுசு என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம்:
இந்நிலையில் படம் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி அளித்துள்ளார். அதில், அயலான் படத்திற்காக சம்பளம் வாங்கவில்லையா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “சம்பளம் வேணுமா, இல்லை படம் வெளியாகுமா என்ற கேள்வி இருந்தது. இது ஒரு மிஷன். குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படம் எடுப்பது முடியாத காரியம். நாங்கள் இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போது பான் இந்தியா என்ற வார்த்தை இல்லை. 

இந்தப் படம் ஒரு தொலைநோக்குப் பார்வை. அப்போது ‘பாகுபலி 1’ மட்டும்தான் ரிலீஸ் ஆகியிருந்தது. தமிழில் ஏன் இப்படி ஒரு படம் எடுக்க முடியாது? இப்படி ஒரு படத்தை எடுத்தால் இதேபோல நிறைய படம் தொடர்ந்து வரும் என்ற நோக்கில்தான் இதனை எடுத்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தயாரிப்பாளருக்கு நிறைய சிக்கல்கள். இந்த தொலைநோக்குப் பார்வை நிறைவேற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி ‘எனக்கு சம்பளம் வேண்டாம். படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டேன்” என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | புத்தாண்டுக்கு ஒளிபரப்பாகும் புது படங்கள்! எந்த சேனலில் எதை பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours