72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள அவரின் கட்சி அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மறைவால் ஓட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்து போய் இருந்தது.
இந்நிலையில் விஜயகாந்தின் இரண்டாவது மகனும் நடிகருமான சண்முகப்பாண்டியன் இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
+ There are no comments
Add yours