பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் ரியல் எஸ்டேட்டில் அதிக அளவு முதலீடு செய்துள்ளார். ஒரு நேரத்தில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்ட அமிதாப்பச்சன் கடின உழைப்பால் சம்பாதித்து பல சொத்துகளை வாங்கி வாடகைக்கு விட்டு இருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமிதாப்பச்சன் மும்பை ஓசிவாரா என்ற இடத்தில் லோடஸ் சிக்னேசர் என்ற கட்டடத்தில் நான்கு அலுவலகங்களை விலைக்கு வாங்கினார். கட்டடம் இப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அலுவலகங்களை பில்டர் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டார்.
அமிதாப்பச்சன் ஒவ்வொரு அலுவலகத்தையும் ரூ.7.18 கோடிக்கு வாங்கி இருக்கிறார். நான்கு அலுவலகங்களுக்கு 12 கார் பார்கிங் இடம் வாங்கப்பட்டுள்ளது. அதில் இடங்களில் வி.ஐ.பி.கள் கார் நிறுத்தும் பிரத்யேக இடங்களாகும்.
அலுவலகங்கள் கைக்கு வந்தவுடன் அமிதாப்பச்சன் அந்த நான்கு அலுவலகத்தையும் நீண்ட கால அடிப்படையில் வார்னர் மியூசிக் என்ற நிறுவனத்திற்கு வாடகைக்குக் கொடுத்துள்ளார். நான்கு அலுவலகத்திற்கும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.2.7 கோடி வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
+ There are no comments
Add yours